இஞ்சி தின்ன கொரங்கு - நாதகவின் அடுத்த சர்ச்சை

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அருந்ததியர் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரோட்டில் அருந்ததியர் பகுதிக்குள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்றபோது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து மதுரை தமிழ் புலிகள் அமைப்பினர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து உருவ பொம்மையை எடுத்து போராட்டம் நடத்தினர் . நெல்லை மற்றும் பல்வேறு இடங்களில் சீமானின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாதி ரீதியாக சீமான் பேசியது இப்படி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் வாக்குகளை பிரச்சாரத்தில், சாலையில் சென்ற பேருந்தில் இருந்த மக்களை பார்த்து வாக்கு கேட்டு கைகாட்டிய போது பதிலுக்கு கை காட்டாமல் சென்ற பொதுமக்களை இஞ்சி திண்ண குரங்கு போல போவுது என்று விமர்சித்துள்ளார் திரைப்பட இயக்குனர் களஞ்சியம்.
தொடர்ந்து சீமானுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இயக்குனர் களஞ்சியம் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்தார். ஆனால் பிரச்சாரத்தின் போது சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து பயணிகளுக்கு கைகாட்டினார். அதற்கு பொதுமக்கள் எந்த எதிர்வினையும் காட்டாமல் போயிருக்கிறார்கள். இதனால் எரிச்சல் அடைந்த களஞ்சியம், இஞ்சி தின்ன குரங்கு போல போகுது என்று கடுப்பாக கூறியுள்ளார்.
இது வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இது குறித்த வீடியோ வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எது பேசினாலும் கீழ நின்னு விசிலடிக்கும் நபர்களாகவா இருபாங்க மக்கள்?!?
— கபிலன் (@_kabilans) February 21, 2023
இவரை கை காட்டினதும் ஆரவாரம் செய்யனுமாம் இல்லனா, “இஞ்சி தின்ன கொரங்குன்னு” ஈரோடு மக்கள திட்டுவாராம்
களஞ்சியம் வாக்கு கேட்கும் முறை 🤢 pic.twitter.com/tqgNjuIsoq