எவ இவ... அடங்காத அமைச்சர்!

 
p

அமைச்சர் பொன்முடியையும் அவரின் சர்ச்சை பேச்சையும் பிரிக்க முடியாது போலிருக்கிறது.   என் தூக்கத்தை ஏன் கெடுக்கிறீர்கள் என்று முதல்வர் கவலையுடன் தெரிவித்தும் கூட அதை கண்டு கொள்ளாமல் , வழக்கம் போல் தனது சர்ச்சை பேச்சை தொடர்கிறார் அமைச்சர் பொன்முடி.

ஒ

 பேருந்தில் பெண்களுக்கு இலவச டிக்கெட் திட்டத்தை ஓசி பஸ் என்று சொல்லி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி அமைச்சர் பொன்முடி.  இப்போ பஸ்ஸில் எப்படி போறீங்க எல்லாம் ஓசி பஸ்ஸில் போறீங்க.. என்று பேசியது தமிழக முழுவதும் இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முதல்வர் ஸ்டாலினும் பொது மேடைகளில் பேசும்போது பார்த்து பேசுங்கள் என்று எச்சரித்த பின்னர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார்.  ஆனால் அதன் பின்னர் அவரின் சர்ச்சை பேச்சு தொடர்கிறது.

 கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டில் புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது கூட்டத்தில் இருந்த மூதாட்டி ஒருவர் எங்கள் பகுதி குறையாக இருக்கிறது என சொல்ல,  ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி குறையாக இருக்கிறதா வாயை மூடு என்று ஒருமையில் பேசியது கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

 விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் அடுத்த மனம்பூண்டியில்  நடந்த நியாய விலைக் கடையின் கட்டட திறப்பு விழாவின் போது,  இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக திமுக செய்த திட்டங்கள் பெண்கள் வளர்ச்சிக்காக முதல்வர் ஸ்டாலின் செய்த வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசியவர்,  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய குழு தலைவரை பார்த்து,  ‘ஏம்மா நீ எஸ் சி தானே’ என்று கேட்டு பெரும் சலசலப்பை சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தார்.

ன்

 விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அருக்குறுக்கை கிராமத்தில் கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிட திறப்பு விழாவின் போது , உங்கள் கிராமத்தில் ரோடு வசதி ,மின்விளக்கு வசதி, குடிநீர் வசதிகளை நான்தான் செய்து கொடுத்தேன் என்று அமைச்சர் பொன்முடி பேசியபோது ,  அங்கிருந்த கிராம மக்கள் எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்ல , ஆத்திரமடைந்த அமைச்சர் பொன்முடி,  இந்த அருங்குறிக்கை கிராமத்தில் அப்படியே எனக்கு ஓட்டு போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க கேட்க வந்துட்டீங்க.. உட்காருங்க.  நான் எப்போ வந்தாலும் அருங்குறிக்கையில் இப்படித்தான் கத்துவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் என்று சத்தம் போட்டார்.  இது கூட்டத்தினர் இடையே பெரும் சலசலப்பையும் மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

 தற்போது கிராம சபை கூட்டத்தில் எவ இவ என்று ஒருமையில் பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார் அமைச்சர் பொன்முடி.  விழுப்புரம் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு  காணை ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பங்கேற்று இருந்தார்.   அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர்,  கெடார் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராணி வரவு செலவு கணக்குகளை பொதுமக்கள் மத்தியில் வாசித்த பின்னர் அமைச்சர் பொன்முடி பேசிய போது,   கெடார் ஊராட்சிக்கு உயர்நிலை பள்ளிக்கூடம், காவல் நிலையம், தொடக்க கூட்டுறவு, வேளாண் சங்கம் உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தது திமுக அரசு தான்.   உயர்நிலையில் படித்த பெண்களுக்கு மாதம் தூறும் ஆயிரம் ரூபாய் முதல் அமைச்சர் வழங்குகிறார் என்று  தெரிவித்தார்.

மு

 அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் எழுந்து,   தன் மகளுக்கு ஆயிரம் ரூபாய் பணம் வரவில்லை என்று சொல்ல , எந்த கல்லூரியில் படிக்கிறார் என்று கேட்க, தனியார் கல்லூரியில் படிப்பதாக அந்த பெண் சொல்ல,  தனியார் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு பணம் கிடையாது என்று அமைச்சர் சொன்னதை கேட்டு கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது .  உடனே அருகில் இருந்த அதிகாரிகள் சொன்னதைக் கேட்டு சுசாரித்துக் கொண்டு தனியார் கல்லூரியில் படிப்பவர்களுக்கும் பணம் உண்டு.  எந்த கல்லூரியில் கொடுக்கவில்லை என்று மனுவாக எழுதிக் கொடுங்கள் என்று சொன்னதும் சமாளித்தார்.  அதன் பின்னர் செல்லங்குப்பம் பகுதியில் 13 வருடங்களாக சாலை வசதி , குடிநீர் வசதி இல்லை என்று பொதுமக்கள் குறை சொல்ல , ஆத்திரமடைந்து அமைச்சர்,   ’எவர் இவ.. சொல்றத முதல்ல கேளு..’ என்று எரிச்சலில் ஒருமையில் பேசினார்.

 அமைச்சர் இப்படி ஒருமையில் பேசியது கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.  அமைச்சரின் இந்த  சர்ச்சை பேச்சு மீண்டும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.