5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

 

5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இந்திய முஸ்லீம் லீக் சார்பாக 6 நிர்வாகிகள் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் முன்னிலையில் திமுக – ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் மற்றும் மமக நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

5 தொகுதிகளை கேட்டோம்; 3 தான் கொடுத்தார்கள்- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி

இதுகுறித்து கருத்து தெரிவித்த முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், “திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.5 தொகுதிகளை கேட்டோம் – சூழ்நிலையை கருதி 3 தொகுதிகளுக்கு சம்மதித்தோம். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும். ஐ.யூ.எம்.எல். ஏணி சின்னத்தில் தான்
போட்டியிடுகிறோம்.எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்” என தெரிவித்தார்.