உத்தர பிரதேச காங்கிரஸ் அதிர்ச்சி... சமாஜ்வாடியில் இணையும் இம்ரான் மசூத்..

 
இம்ரான் மசூத்

உத்தர பிரதேச காங்கிரஸில் முக்கிய தலைவர்களில் ஒருவரான இம்ரான் மசூத் விரைவில் சமாஜ்வாடி கட்சியில் இணைய உள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

உத்தர பிரதேச காங்கிரஸின் முக்கியமாக தலைவர்களில் ஒருவர் இம்ரான் மசூத். முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் சமாஜ்வாடி கட்சியில் இணைய போவதாக அறிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இம்ரான் மசூத் தனது ஆதரவாளர்களுடன் லக்னோ சென்று அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைய உள்ளார்.

காங்கிரஸ்

முன்னாள் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இம்ரான் மசூத் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: எனது நலம் விரும்பிகள் அனைவரும் ஒரே குரலில் எனக்கு ஆதரவளித்தனர். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர்களே, நான் லக்னோவில் அகிலேஷ் ஜியை சந்தித்து எனது குடும்பத்தாரிடம் ஆலோசனை கேட்க விரும்புகிறேன் என்று கூறினேன். பா.ஜ.க.வை தோற்கடிக்க அவர் ஒருவரே தயாராக இருப்பதால், அவரது தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அகிலேஷ் யாதவ்

இம்ரான் மசூத் தன்னை சூழ்ந்திருந்த தனது ஆதரவாளர்களிடம், எனது குடும்பத்தினர் என்னுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். அகிலேஷ் ஜியுடன் ஒரு சந்திப்பை மேற்கொள்வேன், நான் தெளிவான லைன் கொடுக்கிறேன். சமாஜ்வாடி கட்சியில் சேருவதற்கு நாம் லக்னோ செல்ல வேண்டும். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என்று இம்ரான் மசூத் கேட்டார் அதற்கு தொண்டர்கள் ஆம் என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். நீங்கள் அனைவரும் இம்ரான் மசூத், உத்தர பிரதேசத்திலிருந்து இந்த அரசை அகற்ற அகிலேஷ் ஜிக்கு ஆதரவளிக்க நாம் முடிவு செய்கிறோம் என்று தெரிவித்தார்.