நான் சாதி பார்த்து இருந்தால் எடப்பாடியை முதல்வர் ஆக்கி இருப்பேனா? சசிகலா

 
sa

அதிமுகவில் சாதி அரசியல் இருக்கிறது என்ற சலசலப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது.   இது குறித்து அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப,   அதிமுகவில் நான் சாதியை பார்க்கவில்லை .   நான் சாதி பார்த்து இருந்தால் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கி இருப்பேனா? என்று கேட்டார்.

sa

 அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு தனது இல்லத்தில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தான் அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அவரிடம்,   ஓபிஎஸ் திருச்சியில் மாநாடு கூட்டுகிறார்.  அதில் பங்கேற்பீர்களா? ஓபிஎஸ்சை சந்திப்பீர்களா? என்பது குறித்த கேள்விக்கு,   மாநாட்டுக்கு ஓபிஎஸ் அழைத்தால் அது குறித்து முடிவு எடுப்பேன்.  அதே நேரம் ஓபிஎஸ் என்னை சந்திக்க நேரம் கேட்டால் நிச்சயம் சந்திக்க அனுமதி தருவேன் என்றார்.

 அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை வைத்து சட்டப்பேரவையில் திமுக விளையாடுகிறதா? என்ற கேள்விக்கு,   அதிமுக உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  அதிமுகவில் அனைவரும் ஒன்று சேரக்கூடாது என்று திமுக செயல் பட்டு வருகிறது .  சட்டமன்றத்தில் தீர்மானம் குறித்து ஓபிஎஸ் பேசுகிறார்.  உடனே  அவரை எப்படி பேசவிடலாம் என்று அதிமுகவை சேர்ந்த நபர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

 அதற்கு சபாநாயகர்,   அவரும்  அதிமுக தான். அதனால்தான் பேச சொன்னேன் என்று சொல்லாமல்,   முன்னாள் முதல்வர் என்கிற முறையில் தான் பேச சொன்னேன் என்று சொல்கிறார்.   இதிலிருந்தே தெரிகிறது... ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டமன்றத்தில் திமுக இரட்டை வேடம்தான் போடுகிறது என்றார்.