அண்ணாமலை போனால் இவுங்க யாரும் அவர் கூட போகமாட்டாங்க - காயத்ரிரகுராம்
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார். கூட்டணிக்காக சமரசம் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார்கள். ஆனால் தனித்து நின்றால் மட்டுமே தமிழகத்தில் பாஜக வளர முடியும். கூட்டணி முடிவை எடுத்தால் அதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வலியுறுத்தினால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன். ஒரு சாதாரணமாக தொண்டனாக மட்டுமே தொடர்வேன். சமரசம் செய்து கட்சியை நடத்த வேண்டும் என்றால், கூட்டணி அமைத்து கட்சியை நடத்துவதற்கு இங்கே தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எந்த நிலையிலும் நான் என்னை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பேசியது பாஜக தலைவர்களை நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
‘’இதற்கு இன்னும் போலி யூடியூபர்கள், வார்ரூம் முட்டு கொடுக்கவில்லையா ? எங்க அந்த வார்ரூம் தலைவர் கிருஷ்ண குமார் முருகனின் போலி பிராமணர்களாக ஐடிகள்? எங்க அந்த செல்வாவின் சொந்தகார பசங்க? சொம்பு உயர்த்தி பிடிக்கவும்’’ என்கிறார் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரிரகுராம்.
மேலும், ‘’போராட்டத்திற்கான அடுத்த திட்டம். அண்ணாமலை இல்லாமல் பாஜக வளராது. (இது காந்தாரி சாபம்) ஒரு உருட்டல் எதிர்பார்க்கப்படுகிறது. பார்லிமென்ட் தேர்தல் குழு உறுப்பினர் வானதி அக்கா உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார் ஆனால் நீங்கள் கூட்டணி பற்றி பேசுகிறீர்கள். நகைச்சுவை. ஒரு லட்சுமண ரேகாவை நீங்கள் பின்பற்றவில்லை’’என்கிறார்.
‘’ஏன் ராஜினாமா செய்வதாக பூச்சாண்டி காட்டுகிறீர்கள் அண்ணாமலை? ராஜினாமா செய்துவிட்டு போங்க. உங்கள் பின்னால் அமர் பிரசாத் ரெட்டி, திருச்சி சூர்யா, செல்வகுமார், கிருஷ்ணகுமார், முருகன் உட்பட யாரும் வர மாட்டார்கள்’’என்றும் தெரிவித்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.