பந்தாடப்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்- பின்னணி என்ன?
புதிய தவெக அரசுக்கு யாரை நம்புவது என தெரியாமல் தடுமாறுவதால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்படுகின்றன.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரிகளை பொறுத்தவரை அவர்கள் எந்த ஆட்சி வந்தாலும் அந்த ஆட்சிக்கு பங்கம் வராமல் வேலை பார்ப்பார்கள். குறிப்பாக அவர்கள் தாங்கள் சார்ந்த துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டு தான் செயல்படுவார்கள். ஆனால் அதையெல்லாம் பார்க்காமல் கடந்த ஆட்சியில் பவர்ஃபுல்லாக இருந்தார்கள். அவர்கள் நமது ஆட்சியில் வேலை செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறது தமிழக வெற்றிக் கழக அரசு. அந்த அரசு ஒரு குழந்தை அரசு மாதிரி தான். அந்த குழந்தை கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. ஆனால் அதற்குள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அந்த அரசு செயல்படக்கூடாது. திறமையான அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கினால் மட்டுமே அந்த அரசு நற்பெயரை பெறும். அதை விடுத்து ஏடாகூடமாக அரசு நிர்வாக இயந்திரத்தில் கை வைத்தால் மொத்தமாக ஸ்தம்பித்து போய் விடும்.
புதிய அரசுக்கு எல்லாம் அதிகாரிகள் மீதும் நிச்சயம் ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். காரணம் அவர்கள் நமது ஆட்சியில் சரியாக வேலை செய்வார்களா அல்லது ஆட்சியை நடத்திச் செல்வதில் எங்காவது ஏற்படுத்தி விடுவார்களா அதுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தி விடுவார்களா என்ற பயம் இருக்கத்தான் செய்யும். இதையெல்லாம் கடந்து தான் ஒரு அரசு அதாவது புதிய அரசு செயல்பட வேண்டும் . இந்த புதிய அரசு இதுவரை ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டுமின்றி ஐஏஎஸ் அதிகாரிகளையும் பந்தாடி வருகிறது. புதிய அரசுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே அதற்கேற்ப செயல்பட்டால் மட்டுமே நற்பெயர் மக்களிடம் சம்பாதிக்க முடியும். இல்லை என்றால் இப்படி அதிகாரிகளை பந்தாடினால் நிலையான நிர்வாகத்தை தருவதில் தாமதம் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

