திரும்ப திரும்ப கேட்டால் மண்டையை உடைப்பேன்! திமுகவினருக்கு சீமான் எச்சரிக்கை

 
see

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க இருக்கிறது திமுக அரசு.  இதற்காக நிதி ஒதுக்கி அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது திமுக அரசு. 

 கடலில் , அரசு செலவில் பேனா நினைவுச் சின்னம் எழுப்புவதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.  திமுகவிடம் என்ன பணம் இல்லையா?  சொந்த பணத்தில் அண்ணா அறிவாலயத்தில் வைக்க வேண்டியதுதானே ? மெரினா கடலில் எதற்காக அவ்வளவு உயர பேனா சிலை வைக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

sp

 இதில் ஒரு படி மேலே சென்று,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,   மெரினாவில் பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்று சொல்லி வருகிறார்.  இதற்கு திமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் , சீமான் பேனா சின்னத்தை உடைக்கும் வரைக்கும் எங்கள் கை பூப்பரித்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தனது வேட்பாளருக்கு ஆதரவாக சீமான் பிரச்சாரம் செய்த போது,   இந்த விவகாரம் குறித்து பேசினார்.   பேனாவை வைத்தால் உடைப்பேன்.   அதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தால் மண்டையை உடைப்பேன் . கேட்போரின் மண்டையை உடைப்பேன் என்று ஆவேசப்பட்டார்.

அவர் மேலும்,   எல்லோரும் பேனாவை புகழ்ந்து பேசிகிட்டு இருக்காங்களே. அது எப்படிப்பட்ட பேனா தெரியுமா?  நான் அதை எப்படிப்பட்ட பேனா என்பதை அடுக்கி பேசினேன் என்றால் அப்புறம் வெளியில் தலை காட்ட முடியாது.   அது கொஞ்ச நஞ்ச கொடுமை செய்த பேனா கிடையாது என்றவர்,  பார்த்து பேசணும்.  உடைப்பியா சீமான் என்று கேட்டால் ஆமாம் உடைப்பேன்.  இதையே ஓயாமல் கேட்டால் மண்டையை உடைப்பேன் என்று ஆவேசப்பட்டார்.

 நீங்க அதிகார திமிரில் ஆட்டத்தை போட்டு பேனாவை வைத்தால் அதிகாரம் ஒரு நாள் எனக்கு வரும்.  அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது என்று எச்சரித்தார்.
மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு இப்படி எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில்,  கருணாநிதியின் பேனா எப்படிப்பட்டது.  அந்த பேனாவில் இருந்து என்னென்னவெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்தன  என்று திமுகவினர் ஒரு பக்கம் தங்கள் கருத்துக்கு வலு சேர்த்து வருகின்றனர்.