விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்! அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் - சீமான்

 
vs

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நான் அவரை ஆதரிக்க வேண்டியது இல்லை.  அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார் சீமான்.

 விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது உறுதியான ஒன்றுதான் என்பது அனைவரும் அறிந்தது தான்.   அவர் அரசியலுக்கு வருகிறார் என்பதன் முன்னோட்டமாகத்தான் அவரது மன்றத்து நிர்வாகிகளை தேர்தலில் நிற்க அனுமதி அளித்து வந்தார்.   தற்போது அவர் தீவிரமாக அரசியலில் களம் இறங்குவதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்.

v

 வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அதற்கான வேலைகளை இப்போது தொடங்கி இருக்கிறார் விஜய்.   அம்பேத்கர்,  தீரன் சின்னமலை உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாளில் தனது மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு உத்தரவிட்டு வருகிறார்.

 விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளும் அவ்வாறே செய்து வருகின்றனர்.  விஜய் அரசியலில் இறங்கப் போவது உண்மையா என்பது குறித்த கேள்விக்கு இல்லை என்று பதில் சொல்லவில்லை விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகி புஸ்லி ஆனந்த்.   அதை விஜய் அறிவிப்பார் என்று மட்டும் கூறியிருக்கிறார்.  இதன் மூலம் விஜய் அரசியலுக்கு வரப்போகுது என்பது மேலும் உறுதியாகியிருக்கிறது .

pu

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்ப விஜய் அரசியலுக்கு வருவதற்கான முயற்சியை செய்து வருகிறார்.  நான் இதை வரவேற்கிறேன்.  விஜய் அரசியலுக்கு வந்தால் வலிமையாக இருக்கும்  என்றவரிடம்,  விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா என்ற கேள்விக்கு,  நான் விஜய்யை ஆதரிக்க வேண்டியது இல்லை . அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும்.  எங்களின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.