இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை - கனிமொழி

 
க்

திமுகவினரின் சொத்து  பட்டியலை வெளியிடப் போகிறேன் என்று சொல்லி வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  சொன்னபடியே  ஏப்ரல் 14ஆம் தேதியான இன்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார்.

  யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து உள்ளது என்று ஒரு வீடியோவாக தயாரித்து வெளியிட்டுள்ளார். திமுக பைல்ஸ் என்கிற பெயரில் சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார்.  பாஜகவினர் பரப்பிய ஹேஷ்டேக் தேசிய அளவில் டுவிட்டர் தளத்தில் டிரெண்டிங் ஆனது.

க்

 அந்த வீடியோவில் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு , பொன்முடி,  ஏ.வ. வேலு , அன்பில் மகேஷ்,  முதல்வர் மு க ஸ்டாலின் திமுக எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, முதல்வர் மருமகன் சபரீசன் , கலாநிதி மாறன் உள்ளிட்டோரின் சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  மொத்தமாக திமுகவின் சொத்து மதிப்பு 1.34 லட்சம் கோடி என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 இந்த வீடியோவில் பினாமிகள் மற்றும் கருப்பு பணம் உள்ளிட்டவை அடங்கவில்லை.  அது குறித்த பட்டியல் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை .  அதேபோல் இந்த வீடியோவின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார் .  இது குறித்து திமுகவினர் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ரொம்ப ஆத்திரத்திலும் சொல்லியிருக்கிறார் கனிமொழி எம்பி.

 அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செய்தார் . அப்போது அண்ணாமலை வெளியிட்ட சொத்து  பட்டியல் வீடியோ குறித்த கேள்விக்கு சில பேர் அரசியலில் அவர்களின் நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தவறான விஷயங்களை பேசி வருகிறார்கள்.   இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை என்றார் ஆத்திரத்துடன் .