நான் கையெடுத்து கும்பிடுகிறேன்... ஆ.ராசா எம்பி உருக்கம்

 
r

 திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் இன்று நடந்த விவாதத்தின் போது பேசியது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

 ஆ. ராசா எம்.பி. மக்களவையில் பேசிய போது,  குஜராத்  மாடலால் என்ன பயன்? எங்கள் முதலமைச்சர் திராவிட  மாடல் பற்றி பிரதமர் முன்னிலையில் பேசினார்.  எந்த மாடல் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்? என்று ஆவேசப்பாட்டார்.

 தொடர்ந்து பேசிய ஆ. ராசா,  கேசவானந்த பாரதி வழக்கில் 13 நீதிபதிகள் அமர்வு 68 நாட்கள் விசாரணை நடத்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என தீர்ப்பை வழங்கியது .  அந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் பழுதிவாலா அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் ஒன்று எழுதினார். அக்கடிதத்தில் அரசியலமைப்பின் அடிப்படையில் தான் சிறுபான்மை மக்களின் உண்மையான பாதுகாப்பு கேடயம்.   அவர்களின் பிறப்புரிமை மாற்றப்படக்கூடும் என்கிற அச்சம் அவர்களுக்கு இருக்கிறது.  

m

 நாம் இன்று அரசியலமைப்பின் அடிப்படையில் பாதுகாத்து வைத்திருக்கிறோம்.   எதிர்காலத்தில் உங்களை பின் தொடர்கின்றவர்கள் இதே போன்று மதவெறி இல்லாத கண்ணோட்டத்துடன் எத்தனை பேர் இருப்பார்கள் என கேள்வி எழுப்பி எழுதி இருந்தார்.  

 இன்றைக்கு சிறுபான்மையினர் நலனுக்காக நிதி மிகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது.   நான் கையெடுத்து கும்பிடுகிறேன்.  நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். பிரதமர் மோடி இங்கு இல்லை.   இருந்தாலும் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.  அரசியல் அமைப்பை தயவு செய்து காப்பாற்றுங்கள்.  அரசியலமைப்பின் முதல் வரி,  ’நாம் தான் இந்தியர்கள் எனச் சொல்கிறது என்று ஆவேசமாக பேசினார்.

 வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் குஜராத்தில் 22 சதவிகிதமும் உத்தரப்பிரதேசத்தில் 31% மக்களும் உள்ளார்கள்.  நான் அனைத்து மாநிலங்களின் பட்டியலையும் இங்கே வாசிக்கவில்லை.  இந்த பட்டியலில் தமிழ்நாடு எங்கே இருக்கிறது தெரியுமா? தமிழ்நாட்டில் 14 சதவிகிதம் பேரும் கேரளாவில் 10% பேரும் இருக்கிறார்கள்.  இதுதான் திராவிட மாடல் என்றார்.

தொடர்ந்து பேசிய ஆ.ராசா எம்பி,  ஒரு முக்கியமான தகவல்களுடன் இதை முடித்துக் கொள்கிறேன்.  இன்றைய கேள்வி நேரத்தில் என்ன நடந்தது ? அமைச்சர் பதிலளித் திருக்கிறார்.. கடந்த ஆண்டு சிறுபான்மை இன மக்களுக்கு 1810 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தது . ஆனால் நடப்பு ஆண்டில் மிகவும் குறைந்தது.   610 கோடியாக குறைந்திருக்கிறது.  இதன் மூலம்  சிறுபான்மை இன மக்களுக்கு என்ன செய்ய செய்து சொல்ல விரும்புகிறீர்கள்? இது துரதிர்ஷ்டவசமானது; இது சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்தானது என்றார் ஆவேசத்துடன்.