நான் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறேன்.. எம்பி பதவியை ராஜினாமா செய்கிறேன்...

 
t


புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி அன்று பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கிடந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.  இந்த மோசமான செயலை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தின.

st

இந்த சம்பவத்தில் சிறப்புக்குழு விசாரணை நடந்தும்,  சிபிசிஐடி விசாரணை நடந்தும் இன்னும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.  பாதிக்கப்பட்ட இடத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.  இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன.  அப்படி இருந்தும் இந்த சம்பவத்தில் ஓட்டு அரசியலுக்காக குற்றாவளிகள் இதுவரைக்கு தண்டிக்கப்படாமல் இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து, 'வெட்ககரமான' நூறாவது நாள் இன்று என தலைப்பிட்டு, பாஜக தமிழக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்து இந்த நூற்றாண்டின் மாபெரும் அவமான சின்னத்தை உருவாக்கி நூறு நாட்கள் நகர்ந்து விட்டன. ஆனால், இன்று வரை இந்த கொடூரத்தை, கேவலத்தை, அராஜகத்தை, குரூரத்தை செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியாத தமிழக அரசின் 'கையாலாகாத்தனம்' அல்லது அலட்சியம், நடந்த சம்பவத்தை விட அருவருக்கத்தக்கது என்று பதிவிட்டிருக்கிறார். 

st

அவர் மேலும், தமிழக முதல்வர், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் சமூக நீதி குறித்து பேசுவது நகைப்புக்குரியது. இரண்டு சீட்டுகளுக்கு பல கோடிகளை பெற்றுக்கொண்டு உல்லாசமாக இருக்கும் கம்யூனிஸ்டுகளின் கோர முகம் இந்த விவகாரத்தில் அந்த கட்சிகள் கொண்டிருக்கிற அக்கறையினால்(?) வெளிப்பட்டு விட்டது என்கிறார். 

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்வதாக மார்தட்டிக் கொள்ளும் தொல்.திருமாவளவன்  இந்த விவகாரத்தில் ஒடுங்கி, ஒதுங்கி மௌனம் காப்பது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சக்கட்டம். "ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க மனமில்லாத திமுக அரசை கண்டித்து நான் திமுக  கூட்டணியை விட்டு வெளியேறுகிறேன், அந்த கூட்டணியில் இணைந்து நான் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று திருமாவளவன் முழங்கியிருக்க வேண்டாமா?என்று கேள்வி எழுப்பும் நாராயணன்,

na

அரசியல் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியால் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் 'அருவருப்பான மனநிலையோடு' நூறு நாட்களை கடந்து தினம் தினம் மடிந்து கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.  அந்த கடமையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் தவறி விட்டார் என்பதே வருந்தத்தக்க உண்மை. 'வெட்ககரமான' நூறாவது நாள் இன்று என ஆத்திரப்பட்டிருக்கிறார்.