திமுக பொதுக்கூட்டத்தில் தீக்குளிக்கப் போகிறேன் -தலைமைக்கு யூனியன் சேர்மன் கடிதம்

 
d

 திமுக பொதுக்கூட்டத்தில் கணவருடன் சேர்ந்து தீக்குளிக்கப் போவதாக கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார் கடையம் யூனியன் சேர்மன் செல்லம்மாள். 

l

 தென்காசி மாவட்டத்தில் கடையம் யூனியன் சேர்மன் ஆக இருப்பவர் செல்லம்மாள்.  இவர் திமுக கட்சி தலைமைக்கு எழுதியிருக்கும் கடிதம் தான் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 அந்த கடிதத்தில் செல்லம்மாள்,   ஒவ்வொரு யூனியன் கூட்டத்திலும் தன்னை மட்டம் தட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்,  அரசு ஒப்பந்ததாரர் ஆகியோர் தன்னை மக்கள் பணியை செய்ய விடாமல் தடுத்து வருகிறார்கள் என்றும்,  ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் தன்னை துன்புறுத்தி வருகிறார்கள் என்றும்,  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கவுன்சிலர்களிடமும் தனக்கு மரியாதை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

 தன் கணவர் 35 ஆண்டு காலமாக கட்சிக்காக போஸ்டர் ஒட்டுவது முதல் அனைத்து வேலைகளையும் செய்து மேடைப் பேச்சாளர்,  கிளை செயலாளர் என்று தகுதி இருந்தும் மதிக்கப்படவில்லை என்றும் குமறி இருக்கிறார்.

se

 தமிழ்நாட்டிலேயே பைக்கில் செல்லும் ஒன்றிய குழு தலைவர் நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லும் செல்லம்மாள்,  என்னுடைய ஒன்றியம் எனது வார்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை . பெயர் போடவும் இல்லை.  அந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறேன்.  இதனால் எனக்கு வரி தெரியவில்லை.  நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில் உங்களுடைய உயிரை மாய்த்துக்கொள்ள நானும் எனது கணவரும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீயிட்டு கொளுத்திக் கொள்ளப் போகின்றேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.   இந்த கடிதம் வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.