பண்ணையார் அரசியலை சாமானியர் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறேன் - அண்ணாமலை

 
nn

 தமிழக அரசியலை பண்ணையார் அரசியலாக மாற்றி வைத்துள்ளார்கள்.  அதை சாமானியர்களின் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

 சென்னை பாலவாக்கம் கடற்கரையில் தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் 10 லட்சம் மரங்கள் நடும் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.   இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரங்களை நட்டு வைத்த பின் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசினார்.

 ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று  அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்கிறது.   அந்த கூட்டத்திற்கு இபிஎஸ் அழைத்து இருந்தார் .  தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையனும் அழைத்து இருந்தார்.   ஆனால் இன்று இலங்கை செல்கின்ற காரணத்தினால் கட்சியின் மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கட்சி சார்பில் பங்கேற்கிறார் .  வரும் காலத்தில் அனைவரும் உயிரைக் கொடுத்து பாடுபட்டு அதிமுக வெற்றி பெற உறுதியாக வேலை செய்வோம் என்ற அண்ணாமலை,

ii

 கர்நாடகா சட்டமன்ற தேர்தல் கோ இன்சார்ஜ் ஆக என்னைப் போட்டு உள்ளார்கள்.   அதனால் எனக்கு கர்நாடகாவிலும் தேர்தல் வேலை இருக்கிறது.   பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு அன்று பார்க்கத்தான் போகிறீர்கள் .  அதிமுக வேட்பாளர் தான் வெற்றி வேட்பாளராக மாறி வருவார்.  இதில் எந்த ஒரு கடுகளவு கூட சந்தேகம் இல்லை எனக்கு.   நானும் நிச்சயம் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன்.   இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்து ஆதரவு கேட்டு சென்றிருக்கிறார்.   பாஜகவினரும் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்  என்றவர்,  

 கர்நாடகாவின் தேர்தல் வேலை நடைபெற இருக்கிறது.   அங்கு தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்ததால் அங்கும்  நான் செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது.   ஆனாலும்  முன்னுரிமை அதிமுகவின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை வெற்றி பெற வைப்பது தான்.  கூட்டணி தர்மத்தின் படி கட்சி வேட்பாளர் களமிறக்கி இருக்கிறோம்.  ஜெயிக்க வைப்பது எங்களுடைய பொறுப்பு என்றார்.

s

இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் குறித்து,   இடைத்தேர்தலுக்கு பயந்து முதலமைச்சர் அனைத்து அமைச்சர்களையும் ஈரோட்டில் களம் இறக்கி இருக்கிறா.ர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து திமுகவினர்களும் ஈரோடு கிழக்குத் தேர்தலுக்காக வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.  தமிழக அரசியல் சரித்திரத்திலேயே ஒரு ஆளுங்கட்சி இப்படி ஒரு இடைத்தேர்தலை சந்தித்ததாக சரித்திரம் இல்லை.  இதை பார்க்கும் போது ஒன்று தெளிவாக தெரிகிறது... திமுகவிற்கு பயம் வந்துவிட்டது என்றார்.

 இடைத்தேர்தல் குறித்து மேலும் பேசிய அண்ணாமலை,    நம்முடைய பிரச்சார பீரங்கியே அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான்.  அவர் பேச ஆரம்பித்தால் இளையராஜாவை திட்டுகிறார் . பிற்படுத்தப்பட்டவரை திட்டுகிறார்.  தாழ்த்தப்பட்டவரை திட்டுகிறார் .  ராகுல் காந்தி எங்களுடைய பிரச்சார பீரங்கியாக 2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் இருந்தார் .  அதேபோல் ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்ணன் எங்களுக்கு பிரச்சார பீரங்கியாக இருப்பார். அவர் பேச ஆரம்பித்தாலே எதிர்க்கட்சிகளுக்கு ஓட்டு வந்துவிடும்.  எங்கு பணத்தை கொடுக்கலாம் என்று அவரே ஆடியோவில் பேசுகிறார் என்று கிண்டலாக சொன்ன அண்னாமலை, 

 நான் பெரிய மனுஷன் என்று சொல்லிக் கொண்டவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும்.   ஆனால் நான் விவசாயி மகன்.  தமிழக அரசியலை பண்ணையார் அரசியலாக மாற்றி வைத்துள்ளார்கள்.  என்னை பொறுத்த வரைக்கும் நான் சாமானியர்களின் அரசியலாக மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று சீரியசாக சொன்னார்.