இன்னும் எத்தனை மாற்றமோ? அதிமுகவில் 5வது முறையாக பேனர் மாற்றம்

 
aட்

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம்- பழனிச்சாமி இருவரும் இணைந்து போட்டியிட வேண்டும்.  அப்படி இல்லை என்றால் கூட்டணி கட்சியில் இருக்கும் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக நினைத்தது.   ஆனால் இதை எதையும் பற்றி காதில் வாங்காமல் எடப்பாடி பழனிச்சாமி தனது அணி வேட்பாளரை அறிவித்து விட்டார்.   இதை அடுத்து பன்னீர் செல்வமும் தனது அணி வேட்பாளரை அறிவித்தார். 

 இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடைக்காமல்  முடங்கிவிடும் என்று கட்சி தொண்டர்கள் கவலைப்பட்டு வந்தனர்.  நீதிமன்றத்திற்கு சென்று சட்டப் போராட்டம் நடத்தி இரட்டை இலையை தங்கள் அணிக்கு வாங்கி விட்டார் பழனிச்சாமி.   இதன் பின்னர் பன்னீர்செல்வம் போட்டியிலிருந்து விலகிவிட்டார்.  பாஜகவும் பழனிச்சாமி அணிக்கு ஆதரவளித்து இருக்கிறது. 

அட்

 இந்த காலகட்டங்களில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக பணிமனையில் பேனர் வைக்கப்பட்டிருந்தது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது .தற்போது ஐந்தாவது முறையாக பேனர் மாற்றப்பட்டு இருக்கிறது.

 அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.   இதற்காக பெருந்துறை சாலையில் அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பணிமனை அமைக்கப்பட்டு இருக்கிறது .  அந்த பணிமனையை அமைத்த போது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும்,  திறப்பு விழா நடந்த போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைத்தனர்.  அன்று மாலையே முற்போக்கு என்பதை தூக்கிவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி என்று பெயரை மாற்றி பேனர் வைத்தனர் . மறுநாள் காலையில் அதையும் அகற்றி விட்டு அதிமுக கூட்டணி வேட்பாளர் என்று மாற்றினார்கள். 

ஜ்

 இந்த நான்கு பேனர்களிலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, பழனிச்சாமி ஆகியோரின் பெரிய படங்களும் கூட்டணி கட்சி என்ற முறையில் ஜி. கே. வாசன்,  டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரின் சிறிய படங்களும் இடம்பெற்றது.

 நேற்று முன்தினம் இரவில் ஐந்தாவது முறையாக வைக்கப்பட்டிருக்கும் பேனரில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் என்று மாற்றப்பட்டு பிரதமர் மோடியின் பெரிய படமும்,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் சிறிய படமும் , சிறிய கட்சித் தலைவர்களின் படங்களையும் இணைத்து வைத்துள்ளார்கள்.

தேர்தல் 27ம் தேதி என்பதால் இன்னும் பேனரில் ஏதும் மாற்றம் இருக்குமோ என்னவோ?