பிடிஆர் ஆடியோவைப் பெற கொடுத்த பணம் எவ்வளவு?அண்ணாமலைக்கு கேள்வி

 
sa


பிடிஆர் டேப் முதல் பாகம், இரண்டாம் பாகம் வெளியாகி இருக்கும் நிலையில், திமுகவினரை விடவும் அதிகம் கொந்தளிக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.  தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லியில் உள்ள பத்திரிக்கையாளர் ஒருவருடன் பேசியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதலில் ஒரு டேப் வெளியிட்டிருந்தார்.   அந்த ஆடியோ திமுகவில் பெரும் புயலை கிளப்பி இருந்தது.  தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.  இந்த நிலையில் பிடிஆர் டேப் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு இருக்கிறார் அண்ணாமலை. 

p

முதல் மற்றும் இரண்டாவது டேப் இரண்டிலுமே முதல்வர் ஸ்டாலினின் மகன் மற்றும் மருமகனை கடுமையாக விளாசி எடுத்திருக்கிறார் பிடிஆர்.  இவர்கள் இரண்டு பேரும்தான் கட்சியே என்றும்,  இவர்கள் ஒரே ஆண்டில் சேர்த்த பணம் குறித்தும் போட்டுடைத்திருக்கிறார் பிடிஆர்.

இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம்,   ‘’இந்த அண்ணாமலை தேசிய அரசியலில் இருந்தும், மாநில அரசியலில் இருந்தும் வெளியேற்றப்பட வேண்டும். அவர் தனது சொந்த கட்சியில் உள்ள சொந்த மக்களுக்கு இதை செய்கிறார். இது ஒரு கட்சி தலைவர் செய்யும் வேலையாடா!   பாத்ரூமில் கேமரா வச்சா என்ன நாறுமோ அதான் அண்ணாமலை செய்வது. அநாகரீகத்தின் உச்சம் அண்ணாமலை செய்யும் வீடியோ ஆடியோ அரசியல்.

a

மற்றவர்களை ரெகார்டிங் செய்வதன் மூலம் அண்ணாமலை சுத்தமாக இல்லை, ஊழல்வாதி என்பதை காட்டுகிறது. பி.டி.ஆர்  அவருடைய உண்மையான குரலாக இருந்தால் நிதியமைச்சர் சுத்தமாக இருப்பது போல் தெரிகிறது. எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் அல்லது மகன் அல்லது மருமகன் யாரேனும் தவறு செய்தால், திராவிட மாடல் மீறிச் சென்றிருந்தால் கழகத்தில் பி.டி.ஆர் கண்டிக்கிறார் என்பதை காட்டுகிறது’’என்கிறார். 

su

மேலும்,  ‘’இது திமுகவிற்கு/கழகத்திற்கு ஆரோக்கியமானது. இப்போ விரக்தியடைந்த அண்ணாமலை குணம் தனியுரிமையை மீறும் ஆடியோ வீடியோக்களை ரெகார்ட் செய்வதில் அனைவருக்கும் பின்னால் இருப்பது போல் தெரிகிறது. நேரத்தை வீணடிப்பது. அண்ணாமலையின் மலிவான அரசியல். இது ஒரு தலைமையா? அது வெட்கக்கேடானது. இது அண்ணாமலையை தவறான வழியில் வெளிப்படுத்துவதாகும். இந்த ஆடியோவைப் பெற நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தினீர்கள்? இதை பதிவு செய்ய நீங்கள் யாரை விதைத்தீர்கள்? நிச்சயமாக அதிக பணம்’’என்று கேட்கிறார்.

தொடர்ந்து இது குறித்து காயத்ரி,  ‘’அன்புள்ள பொதுமக்களே, இதுபோன்ற மலிவான மனநிலை தலைவருடன் உங்கள் ஆண் குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பாக பூட்டி வைத்திருங்கள். அண்ணாமலையின் நாட்டிற்கான சேவை இலவச ஆடியோ மற்றும் வீடியோ சேவை. முழு பாதுகாப்புடன் உள்ள மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர் அலுவலக அறைக்குள் ஏதேனும் ரெக்கார்டர் மூலம் அவர் நுழைய முடிந்தால், அவர் நாட்டிற்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் இதைச் செய்யலாம். அண்ணாமலை மாதிரியான மனிதர்கள் தமிழகத்திற்கு ஆபத்தானவர்கள்.   அண்ணாமலை இளைஞர்களுக்கு சிறந்த உதாரணம் அல்ல. ரெகார்டிங் ஒரு குற்றம், இப்படி பல குற்றங்கள் நடக்கும்’’என்கிறார்.