அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள்?

 
ச் ச்

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள பாமக-வுக்கான தொகுதிப்பங்கீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தொகுதிகள் ஏற்கெனவே முடிவாகிவிட்டது. அதனை பின்னர் அறிவிப்போம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பாமக-வுக்கு அன்புமணி தரப்பின் பங்களிப்பை கருத்தில் கொண்டு 17 முதல் 20 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) இடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பாமக இரு பிரிவாகப் பிரிந்துள்ளதால், அன்புமணி தரப்புக்கு 20 தொகுதிக்கும் குறைவாகவே வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகுதிகள் ராமதாஸ் தரப்புக்கு வழங்கப்படும் என்றும் பேசப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்றது.