ஆளுநரிடம் உள்ள அரசு ரகசியங்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரிகிறது? கி.வீரமணி கேள்வி

 
k

ஆளுநருக்கும் அண்ணாமலைக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் கி. வீரமணி.   ஆளுநரிடம் உள்ள மசோதாக்கள் பற்றி அண்ணாமலை சொல்லி வருவதால் கி. வீரமணி இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் .

பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையத்தின் அருகே மாவட்ட சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பரப்புரை பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பங்கேற்றார். 

na

  இக்கூட்டத்தில் பேசிய வீரமணி,   சமூக நீதி பற்றி கருணாநிதி ஒருவரே போதுமான விளக்கம் கொடுத்தார்.   பெண்களின் இட ஒதுக்கீடு உள்பட திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், புதுமைப் பெண் திட்டம் ஆகியவை இருக்கின்றன என்றார்.

அவர் மேலும் தனது பேச்சில்,  தமிழ்நாடு ஆளுநர் அரசுக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றார்.  அரசு ரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாது என்கிற நிலையில் பாராளுமன்றத்தில் கனிமொழி எம்பி தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாட்டில் 20 மசோதாவை நிறைவேற்றாமல் அதனை ஆலோசனை செய்யாமல் இருந்து வருகிறார் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.  அதற்கு ஆளுநர் பதில் சொல்வதற்கு பதிலாக,  அண்ணாமலை பதில் சொல்கிறார்.

 அரசு ரகசியங்கள் மற்றும் ஆவணங்களை வெளியில் சொல்லக்கூடாது என்று பதவிப்பிரமாணத்தில் இருக்கும் போது,  அண்ணாமலை இடம் மசோதாவை பற்றி கூறியிருப்பதால் அண்ணாமலை வெளியே வந்து 15 மசோதாதான் பாக்கி உள்ளது.  மீதமுள்ள 5 மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

ஆளுநரின் மசோதா நிறைவேற்றத்திற்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்.  அந்த ரகசியங்களை வெளியிடும் ஆளுநர் பதவியில் இருந்து வெளியேற வேண்டாமா என்று கேட்டார்.