டெல்டாவில் நிலக்கரி எப்படி? முதல்வர் எதிர்த்தாலும் தடுக்க முடியாதா?

 
aa

 தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.  தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து இன்று விவாதம் எழுந்தது.  அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின்,   முதல்வர் என்கிற முறையில் இல்லாமல் நானும் டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்கிற முறையில் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கிறேன்.   இந்த திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.

sm

இதையடுத்து,  சட்டசபையில் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை.  இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசணும்.  அங்கே தான் குரல் கொடுக்கணும்.   திமுக அரசு கும்பகர்ணன் போல இந்த விஷயத்தில் தூங்கிக் கொண்டிருக்காமல் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் . திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்கு முழுமூச்சோடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி .
 
இந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் பாரதிநாதன்,   ‘’காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்ட மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. காவிரி டெல்டாவில் நிலக்கரியா? என்ற குழப்பம் வருகிறதா? வியப்பேதும் இல்லை. இத்தனை நாளும் ஓன்ஜிசி எண்ணை நிறுவனம் மூலமாக மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் எடுக்கப்பட்டன. இந்த வாயுக்கள் நிலத்தடியில் நிலக்கரி படிவங்களில் சிக்கி இருந்தன. 

பல்லாயிரம் ஆண்டுகளாக நிலத்தில் விழுந்து மக்கிப் போன மரங்கள் நிலக்கரியாக மாறுவதாக சொல்லப்படுகிறது அல்லவா? காய்ந்த மக்கிய இலை தழைகள் தான் வாயுக்களாகின்றன. மத்திய அரசு இத்தனை நாளாக அந்த வாயுக்களை திருட்டுத்தனமாக எடுத்து விட்டு இப்போது நிலக்கரி சுரங்கங்கள் தோண்டப் போகிறது. 

ak

மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் இதை தடுக்க முடியாது. மக்கள் போராட்டமே தீர்வு!  மீத்தேன் எதிர்ப்பு போராட்டத்தை சொல்லும் என்னுடைய 'ஆக்காட்டி' நாவல் விரைவில் மூன்றாம் பதிப்பாக வெளியாகிறது. புரட்சி பாரதி பதிப்பகம் வெளியிடுகிறது’’என்று கூறியிருக்கிறார்.