நம்புற மாதிரியே பேசுவார் : மாஜியை கிண்டலடித்த துரைமுருகன்

 
d

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எதை பேசினாலும் நம்புற மாதிரியே பேசுவார்.  ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் சொல்ல , உள்ளதை பேசுறது நம்புற மாதிரியேதான் இருக்கும் என்று விஜயபாஸ்கர் பதில் அளிக்க அவையில் ஒரே சிரிப்பலை தான்.

v

 தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அதிமுக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது,   ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இந்தியாவில் முதலிடத்தில் இருந்த துறை, கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்னோக்கிச் சென்றது ஏன்? தெலுங்கானா, மகாராஷ்டிரா எல்லாம் நம்மை மிஞ்சி விட்டார்கள் என்றார் . திமுக பட்ஜெட்டில் சொல்லியிருக்கும் பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டவை.  அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் சீர் கொண்டு வருவதற்கு முன்னதாகவே சீர்வரிசை கொடுக்கும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார்.   அதிமுக ஆட்சி காலத்தில் பச்சைக் கலராக இருந்த பெட்டி மஞ்சளாக மாறியிருக்கிறது.  அம்மா பரிசு பெட்டகம் குழந்தைகள் பரிசு பெட்டகமாக மாறி இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

 அப்போது குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன்,   விஜயபாஸ்கர் எது பேசினாலும் நம்புற மாதிரியே பேசுவார். அது எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சிரித்துக் கொண்டே சொல்ல,  உடனே விஜயபாஸ்கர் உள்ளதை பேசுவது நம்புவது போலத் தான் இருக்கும் என்று  பதிலளிக்க,  அவையில் ஒரே சிரிப்பலைதான்.