முதல்வர் மீதான குற்றச்சாட்டு விசாரணைக்கு வர அவரே வழி செய்துவிட்டார் -எச்.ராஜா

 
s

 முதல்வர் ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டு விசாரணைக்கு வருவதற்கு அவரே வழிவகை செய்துவிட்டார் என்று கூறியிருக்கிறார் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா.

 திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக குடும்பத்தினர் சொத்து பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  திமுக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, வேலு, உதயநிதி ஸ்டாலின் ,அன்பில் மகேஷ் மற்றும்  எம்பிக்கள் கனிமொழி, கலாநிதி வீராசாமி,  டி ஆர் பாலு , ஜெகத்ரட்சகன்,  கதிர் ஆனந்த் மற்றும் பொன்முடி மகன் கவுதம் சிகாமணி , கலாநிதி மாறன் , முதல்வர் மருமகன் சபரீசன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார்
அண்ணாமலை.

s

 அண்ணாமலை வெளியிட்ட இந்த சொத்து ஆவணங்கள் போலியானவை என்று திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.  திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ். பாரதி அண்ணாமலை இதற்கு  மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்,  அப்படி கேட்கவில்லை என்றால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி நோட்டீஸ் அனுப்பினார் .

இதேபோன்று உதயநிதி ஸ்டாலினும் கனிமொழியும் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.  ஆனால் யாருக்கும் மன்னிப்பு கேட்க முடியாது . அபராத தொகையும் வழங்க முடியாது.  நான் சொன்ன குற்றச்சாட்டு உண்மை. அதற்கு ஆதாரம் இருக்கிறது . ஆதாரம் இல்லை என்று அவர்கள் நினைத்தால் வழக்கு தொடரட்டும். நான் நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்ப்பிப்பேன் என்று அதிரடி காட்டி இருந்தார் அண்ணாமலை.

h

இதன் பின்னர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.  இது குறித்து பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அளித்திருக்கும் பேட்டி ஒன்றில்,   அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருப்பதை வரவேற்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

 அவர் மேலும்,  அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் .  ஆதாரம் இல்லாமல் அவர் யார் மீதும் குற்றம் சொல்ல மாட்டார்.  முதல்வர் மீது டெண்டர் குற்றச்சாட்டு சாட்டு சொல்லி ஏற்கனவே ஐந்து நபர்கள் சிபிஐக்கு புகார் கொடுத்து உள்ளார்கள்.  முதல்வரே இந்த வழக்கு கொடுத்திருக்கும் நடவடிக்கையின் மூலமாக அவர் மீது வைக்கப்பட்டிருக்கும்  குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு வருவதற்கு அவரே வழிவகை செய்திருக்கிறார் என்கிறார்.