வைகோ, ராமதாஸ் மீது பிரபாகரன் நம்பிக்கை இழந்தாரா? ஒருமையில் திட்டினாரா? திருமா மீது மதிமுக நிர்வாகி ஆவேச பாய்ச்சல்

 
vr

சத்தியம் தொலைக்காட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது .  ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழக தலைவர்கள் குறித்து திருமாவளவன் பேசியதுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

 உமர் முக்தார் அந்த பெட்டியை எடுத்திருந்தார்.  அந்த பேட்டியில் ஈழப் பிரச்சனையில் தமிழகத் தலைவர்கள் அரசியல் செய்தார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார் திருமா . மேலும்,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக அவர் பல கருத்துக்களை முன் வைத்திருந்தார்.  ஈழத்தமிழர் பிரச்சனையில் கருணாநிதிதான் அரசியல் செய்தார் என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில், கருணாநிதியை தவிர மற்ற அனைவரும் அரசியல் செய்தார்கள் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் திருமா.

pr

அதே நேரம் மதிமுக பொதுச்செயலாளர்  வைகோ மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.  இது குறித்து ஆவேசப்பட்டுள்ளார் மதிமுக வின் துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன்.   இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,   வைகோவின் நெஞ்சில் நிறைந்த தம்பியாக எந்நாளும் திகழும் திருமா அந்த நேர்காணலில் ஈழப் பிரச்சனை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துக்கள் மிகுந்த மன வேதனையையும் கொந்தளிப்பையும் எங்கள் இயக்கத் தோழர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 

 இந்திய நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர் எனப்படுகொலையை தடுக்க தடுத்து நிறுத்தக் கூறி 1981 ஆம் ஆண்டில் இருந்து வீர முழக்கமிட்டவர் வைகோ.  பாலஸ்தீன போராளிகளை அங்கீகரித்த இந்தியா ஈழ விடுதலைப் புலிகளை ஏன் அங்கீகரிக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பியவர் வைகோ.  ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தமிழ் ஈழம் ஒன்றே நிரந்தர தீர்வு என்று 40 ஆண்டு சொல்லி வருகிறார் வைகோ. 

 கிழக்கு மாகாணங்களில் இருக்கும் தமிழர்கள் அம்மண்ணின் பூர்வ குடிமக்கள் என  மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியை நாடாளுமன்றத்தில் சொல்ல வைத்தவர் வைகோ.    இலங்கை இந்திய ஒப்பந்தம் போட்டபோது கடுமையாக எதிர்த்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

r

 அவர் மேலும் ,  தமிழ்நாட்டு இளைஞர்களின் இதயச்சுவர்களில் தமிழீழ விடுதலைப் போராட்டமும் பிரபாகரனும் கல்வெட்டாய் பதிந்து இருப்பதற்கு வைகோ தான் காரணம் என்று பல மேடைகளில் திருமாவளவனே சுட்டிக்காட்டி இருக்கிறார் .   விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் தமிழ்நாட்டில் அரசியல்களில் பல இழப்புகளை சந்தித்தவர் வைகோ.   பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 577 நாட்கள் வேலூர் சிறையில் வாடியவர் வைகோ.  ஆனால் பொத்தாம் பொதுவாக தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஈழத்தமிழர் பிரச்சனையில் அரசியல்  செய்தார்கள் என்று திருமாவளவன் சொல்வது வேதனை அளிக்கிறது.

 வைகோ மீது புழுதி வாரி சுற்றுவது எந்த நோக்கத்தில்?  புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தமிழ்நாட்டுத் தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார் ஒருமையில் திட்டினார் இன்று திருமாவளவன் குறிப்பிடுகின்றார்.   அந்த காலகட்டத்தில் வைகோ, நெடுமாறன்,  ராமதாஸ் தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் தான்  இந்தியாவின் நிலைப்பாடு தவறான அணுகுமுறை என்று கண்டனம் தெரிவித்து வந்தார்கள் .  வைகோ பெயரை நெறியாளர் கேட்டபோதும் திருமா அதை கடந்து போனது வருத்தமளிக்கிறது என்று கூறி இருக்கிறார்.

vt

 2002 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இருந்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த அழைப்பை ஏற்று திருமா உட்பட சிலர் ஈழம் சென்ற போது வைகோ வேலூர் சிறையில் இருந்தார் என்பதும் வைகோ இலங்கையி  நுழைய சிங்கள அரசு தடை போட்டிருந்தது.  இன்றும் அந்த தடை நீடிக்கிறது என்பதும் நேர்காணல் செய்த நெறியாளருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.

 எம்ஜிஆர் பற்றி உயர்வாக கூறினார் பிரபாகரன் என்று சொன்ன திருமா,   மற்ற தமிழ்நாட்டுத்  தலைவர்களின் மீது நம்பிக்கை இழந்து விட்டதாக கூறினாரா?  யார் யார் என்று நெறியாளர் கேட்டதற்கு தனியாக சொல்கிறேன் என்கிறார் திருமா.  வைகோ ,நெடுமாறன் கொளத்தூர் மணி,  கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் இருந்தார்கள்.  தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்ததாக பிரபாகரன் சொன்னதைப் போன்று நிறுவுகிறார் திருமா.  இது நியாயம் தானா?  இந்திரா காந்தி சொல்லித்தான் எம்ஜிஆர் புலிகளுக்கு நான்கு கோடி நிதி வழங்கியதாக சொல்கிறார் திருமா.  இந்திரா காந்தி 1984 மறைந்துவிட்டார்.  ஆனால் எம்ஜிஆர் நிதி கொடுத்தது  1986 ஆம் ஆண்டில்தான் . இதுவும் முரணான தகவல். 

 போரை நிறுத்த கோரி செங்கல்பட்டில் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தபோது ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் வந்து பார்த்தார்கள்.  வேறு யாரும் என்னை ஊக்கப் படுத்த விடவில்லை என்று சொல்கிறார் .  நெறியாளர் அதற்கு வைகோ வெளிநாட்டில் இருந்தாரா?  என்று நக்கலாய் கேட்டதையும் அவர் ஆமோதிக்கிறார். பார்வதி அம்மாளை மருத்துவ சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து உரிய அனுமதி பெற்று சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தார் சிவாஜிலிங்கம்.  இதிலும் வைகோ மீது வீண்பழி போடப்படுகிறது எதற்காக? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.