ஓபிஎஸ் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? இபிஎஸ் ராமன் ஆகிவிட்டாரா? ஜெயலலிதா உதவியாளர் பரபரப்பு

 
eஒ

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் - பழனிச்சாமி இரு தரப்பு வேட்பாளர்களும் களமிறங்கினர்.  இதனால் இரட்டை இலை முடங்கிவிடுமே என்று தொண்டர்கள் கவலை அடைந்தனர்.  நீதிமன்றம், தேர்தல் ஆணையம்  மூலம் இரட்டை இலை பழனிச்சாமி தரப்புக்கே கிடைத்துவிட்டது.  முன்னதாகவே பன்னீர்செல்வம் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டார்.  பழனிச்சாமி அறிவித்த வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார் பன்னீர்செல்வம்.  அமமுக வேட்பாளரும் வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருக்கிறார்.  திமுகவுக்கு எதிராக அதிமுக வெற்றிக்கு பாடுபட அனைவரும் ஒன்றுபட்டுள்ளார்கள்.

இதுகுறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்,  ‘’ஓபிஎஸ் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? அப்படி என்றால் இபிஎஸ் ராமன் ஆகிவிட்டாரா? விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்’’ என்று தெரிவித்திருக்கிறார். 

ஒ

அவர் மேலும்,  ‘’என்னுடைய ஆசை,  வேட்பாளர் தென்னரசு அவர்களுக்கு ஓபிஎஸ் அவர்கள் பணியாற்ற வேண்டும். தென்னரசு அவர்கள் அம்மாவிற்கு பிடித்தவர். அவரது அன்பால் எல்லோரையும் கவர்ந்தவர். தலைமை மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர். தொண்டராக பணியாற்றி படிப்படியாக ஏறி ஒரு நல்ல நிலைக்கு வந்தவர். பல போராட்டங்களில் துவண்டு விடாமல் வெற்றி கண்டவர். அந்த கழக விசுவாசிக்கு எல்லோரும் ஒன்று கூடி உழைக்க வேண்டும். இபிஎஸ் அவர்களும் ஓபிஎஸ் அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை.

 இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா?   எவ்வளவோ விட்டுக் கொடுத்த ஓபிஎஸ் அவர்கள், நீங்கள் எதை செய்தாலும் ஏற்றுக்கொண்டு வந்தார். உங்களது ஆசை என்னவென்று சொன்னால் ஓபிஎஸ் அவர்களிடம் பேசுவதற்கு நான் தயார். கழக நன்மைக்காக அவர் எதையும் விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்து நீங்கள் ஒன்றுபட்டால், ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்பதே எல்லோருடைய நம்பிக்கை என்று பதிவிட்டிருக்கிறார். 

ப்