டெபாசிட் இழந்தாரா ஜெ.,? தவறான தகவலை பதிவு செய்தாரா அண்ணாமலை?

 
ஜ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு தேர்தலில் டெபாசிட் இழந்தார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   ஜெயலலிதா தான் சந்தித்த எட்டு தேர்தல்களில் ஒரு தேர்தலில் மட்டும் தோல்வியுற்றாரே தவிர டெபாசிட் இழக்கவில்லை . வெறும் 8000 வாக்குகளில் மட்டுமே அவர் தோல்வி அடைந்திருக்கிறார்.  ஆனால் டெபாசிட் இழந்தார் என்று தவறான தகவலை பதிவு செய்திருக்கிறார் அண்ணாமலை என்று கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது .

அதிமுக - பாஜக மோதலில் அது குறித்து அண்ணாமலை பேசிய போது,  நான் இங்கே இட்லி தோசை சுட வரவில்லை.  நான் மற்றவர்களைப் போல் மேனேஜராக இருக்க பாஜகவிற்கு வரவில்லை.  நான் ஒரு தலைவர்.  நான் எடுக்கமுடியில் உறுதியாக இருப்பேன் .  ஜெயலலிதா போல கருணாநிதி போல நானும் ஆளுமையுடன் இருப்பேன். நான் இப்படித்தான் இருப்பேன்.  ஜெயலலிதாவுக்கு கூட ஒரு தேர்தலில் டெபாசிட் போச்சு.  ஆனால் துணிந்து நின்று அடுத்த தேர்தலில் வென்றார் என்று அண்ணாமலை பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது . அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கி இருக்கிறது.

ர்ஜ்ஜ்

 உண்மையிலேயே ஜெயலலிதா ஒரு தேர்தலில் டெபாசிட் இழந்தாரா? இது குறித்து அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பரபரப்பான பேச்சு எழுந்திருக்கிறது.   ஜெயலலிதா மொத்தம் எட்டு தேர்தல்களை சந்தித்து இருக்கிறார் . அதில் ஏழு தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார்.  1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்தான் ஜெயலலிதா தோல்வியுற்றார்.   அந்த தேர்தலில் தான் திமுக - தமாக கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார்.  அப்போது அது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

 அந்த தேர்தலில் தான் திமுக 167 இடங்களிலும்,  தமிழ் மாநில காங்கிரஸ் 39 இடங்களிலும்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8 இடங்களிலும் , இந்திய தேசிய லீக் ஐந்து இடங்களிலும்  வெற்றி பெற்றது.  

அன்ன்

அந்த தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.  திமுக வேட்பாளர் சுகவனம் வெற்றி பெற்றார்.  ஜெயலலிதாவை சுகவனம் தோற்கடித்தது குறித்து அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி யானை காதில் புகுந்த இரும்பு என்று விமர்சனம் செய்திருந்தார். 59 ஆயிரத்து 148 வாக்குகள் பெற்றிருந்தார் சுகவனம்.  ஜெயலலிதா 50, 782 வாக்குகள் பெற்றிருந்தார் . தோல்வி வித்தியாசம் 8,366 வாக்குகள் மட்டுமே.  அந்த தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்தார்.  அதை தவிர டெபாசிட் இழக்கவில்லை. இது தெரியாமல் டெபாசிட் இழந்து விட்டார் என்று அண்ணாமலை  சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார்.