காங்கிரஸ் பாஷையில் பேசினால் கட்சியை விட்டு வெளியே போங்க... வருண் காந்திக்கு ஷாக் கொடுத்த பா.ஜ.க.

 
வருண் காந்தி

காங்கிரஸ் பாஷையில் பேச விரும்பினால் வருண் காந்தி கட்சியை விட்டு வெளியே போக வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் தெரிவித்தார்.

உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை)  லக்னோவில் மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

பா.ஜ.க.

பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி இந்த வீடியோவை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து, இவர்களும் பாரதத்தின் குழந்தைகள். அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதை மறந்து விடுங்கள், அவர்களை கேட்க  யாரும் தயாராக இல்லை, பின்னர் அவர்கள் இந்த காட்டுமிராண்டித்தனமான தடியடியையும் எதிர்க்கொள்ள வைக்கப்படுகிறார்கள் என்று பதிவு செய்து இருந்தார். வருண் காந்தியின் கருத்து அம்மாநில பா.ஜ.க.வை விமர்சனம் செய்வதாக இருந்தது. இதனையடுத்து வருண் காந்திக்கு  பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஹர்நாத் சிங் யாதவ்

இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. ஹர்நாத் சிங் யாதவ் கூறுகையில்,  வருண் காந்தி காங்கிரசின் பாஷையில் பேசுகிறார். அவரிடம் ஏதேனும் தார்மீகம் இருந்தால், பா.ஜ.க.வுக்கு எதிராக பேசி, காங்கிரஸூக்கோ அல்லது வேறு எங்காவது போக வேண்டும் என்ற மன உறுதியுடன் இருந்தால், அவர் உடனடியாக பா.ஜ.க.விலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும். அவர் (வருண் காந்தி) கட்சியின் கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தை மதிக்க வேண்டும். அவர் பா.ஜ.க.வில் இருக்கும்போது பா.ஜ.க.வின் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.