முதுகெலும்பு இருக்கா? சீறிய ஹெச்.ராஜா! என் கம்பனியில் வேலை வாங்கி தரேன் வாங்க- செய்தியாளர் அதிரடி
மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக ஆடியோ குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சீறிய வீடியோ வைரலாகிவருகிறது.
மதுரையில் கடந்த 13 ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்டது. இதில் தொடர்புடைய பாஜகவை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரனுடன் பேசிய ஆடியோ வெளியானது. அதில், நிதியமைச்சர் மதுரைவரும் போது ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்தவேண்டும் என்பதுபோல பதிவாகியிருந்தது. எனவே நிதியமைச்சர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் திட்டமிட்டு செய்ததாக விமர்சனம் எழுந்தது.
இதுகுறித்து ஹெச்.ராஜாவிண்ட செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “உங்க வீட்டு ஆளுங்களை பற்றி தப்பாக சொன்னா நீங்க ஏத்துப்பீங்களா? என் கட்சி என் வீடு. இதுபோன்ற கேள்வியை உங்களால் முதல்வர் ஸ்டாலினை பார்த்து கேட்க முடியுமா? உங்களுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? நீங்கள் எல்லாம் பயப்படுகிறீர்கள்? ஹெச் ராஜாவிடம் கேள்வி கேட்டு விட்டால் தைரியம் வந்துவிடுமா, நேர்மையா இருங்க. வேணும்னா நான் உங்களுக்கு வேலை தரேன். என்னிடம் வாருங்கள் எனக் கூறினார். அதற்கு செய்தியாளர் ஒருவர் வேலையெல்லாம் வேண்டாம் வேண்டுமானால் என் கம்பெனியில் வேலை வாங்கித் தருகிறேன் நீங்கள் வாருங்கள் என நக்கலடித்தார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.