2024ல் மக்களை தேர்தலில் காங்கிரஸ் 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வாய்ப்பில்லை.. குலாம் நபி ஆசாத்

 
குலாம் நபி ஆசாத்

2024ல் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 300க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பூஞ்ச் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் பேசுகையில் கூறியதாவது: சட்டப்பிரிவு 370 குறித்து உச்ச நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்ய முடியும் அல்லது ஆளும் அரசு அதை செய்ய முடியும். ஆனால் அவர்கள் அதை ரத்து செய்தால் எப்படி செய்வார்கள்? இந்த முடிவை திரும்ப பெற காங்கிரசுக்கு தற்போதைய சூழ்நிலையில் 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம்

 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளை எங்களால் கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் விரும்புகிறேன், கடவுள் விரும்பினால் இந்த இலக்கை நாம் அடைய முடியும், ஆனால் வாய்ப்புகள் இருண்டது. மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ்

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியிருப்பது அந்த கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படி கூறுவது காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கட்சியின் மீதான நம்பிக்கையை குலைத்து விடும் என்று பல தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.