தற்போதைய ஆட்சியை விட மகாராஜாவின் சர்வாதிகார ஆட்சி சிறப்பாக இருந்தது.. மோடி அரசை தாக்கிய ஆசாத்

 
குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்கு செல்லலாம்: உச்ச நீதி மன்றம்.

ஜம்மு அண்டு காஷ்மீரில் தற்போதைய ஆட்சியை விட மகாராஜா ஹரி சிங்கின் சர்வாதிகார ஆட்சி சிறப்பாக இருந்தது என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசை குலாம் நபி ஆசாத் குற்றம் சாட்டினார்.

ஜம்மு அண்டு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத் கூறியதாவது: ஜம்மு அண்டு காஷ்மீரில் ஜம்மு அண்டு காஷ்மீரில் தற்போதைய ஆட்சியை விட மகாராஜா ஹரி சிங்கின் சர்வாதிகார ஆட்சி சிறப்பாக இருந்தது. காஷ்மீர் மற்றும்  ஜம்மு பகுதிகளின் மக்களின் நலனுக்காக காஷ்மீர் ஆட்சியாளர்கள் 3 விஷயங்களை வழங்கினர். அதில் தர்பார் மாற்ற (தலைநகரங்களுக்கு இடையே அலுவலகங்கள் மாற்றம்) நடவடிக்கையும் ஒன்று.

மகாராஜா ஹரி சிங்

மகாராஜா ஹரி சிங் அப்பகுதியை சேர்ந்தவர்களிடமிருந்து நிலம் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதுகாப்பதை உறுதி செய்தார். சர்வாதிகாரி என்று அழைக்கப்படும் மகாராஜா ஹரி சிங் தற்போதைய அரசாங்கத்தை விட மிகச் சிறந்தவர். மகாராஜாவின் நடவடிக்கைகள் பொதுமக்களின் நலனுக்காகவே இருந்தன. தற்போதைய அரசாங்கம் தர்பார் நகர்வு, நிலம் மற்றும் வேலை வாய்ப்புகள் ஆகிய 3 விஷயங்களையும் நம்மிடமிருந்து பறித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

மத்திய அரசு

கடந்த ஜூன் 20ம் தேதியன்று ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேச துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, அங்கு ஆண்டுக்கு இரு முறை நடைபெறும் கோடைகால தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் குளிர்கால தலைநகர் ஜம்மு இடையே அலுவலங்களை மாற்றும் பாரம்பரிய தர்பார் நகர்வு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தார். ஜம்மு அண்டு காஷ்மீரில் இப்போது நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்தவர்களும் நிலம் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.