ஸ்டாலின் ஐயா அண்ணாமலை போல் மலிவான மனிதன் இல்லை- காயத்ரி ரகுராம்

 
gayathri raghuram annamalai

சொந்தக் கட்சிக்காரர்களை தூக்கி எறிவதற்கு ஸ்டாலின் அய்யா அண்ணாமலை போல் மலிவான மனிதன் இல்லை என பாஜகவிலிருந்து விலகிய காய்த்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். 

annamalai and gayathri

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “ஆடியோ காரணமாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டது தவறு. பிடிஆர் ஆடியோவை வெளியிட்டது தொடர்பாக என் மீது வழக்கு தொடருங்கள்” எனக் கூறியிருந்தார். 


இதனை குறிப்பிட்டு டிவிட்டரில் விமர்சித்துள்ள காயத்ரி ரகுராம், “மலிவாக ஆடியோ கசிந்த பிறகு பி. டி. ஆர். மாற்றப்பட்டதாக அவர் நினைக்கிறார். இன்னும் பி.டி.ஆர் கட்சியில் இருக்கிறார், இன்னும் அமைச்சராக இருக்கிறார், இன்னும் திமுக கட்சிக்காரராகவும் உறுப்பினராகவும் இருக்கிறார். சொந்தக் கட்சிக்காரர்களை தூக்கி எறிவதற்கு பாஜகவை போல திமுக இல்லை. பொறாமை, பழிவாங்கும் மனப்பான்மையுடன் சொந்தக் கட்சிக்காரர்களை தூக்கி எறிவதற்கு ஸ்டாலின் அய்யா அண்ணாமலை போல் மலிவான மனிதன் இல்லை. ஸ்டாலின் அய்யா உங்கள் மலிவான அரசியலுக்கு அடிபணிய மாட்டார்.


திமுக அரசின் அமைச்சர் மாற்றம் குறித்து தலையிட அத்தகைய முட்டாள் மட்டுமே பேச முடியும். திமுக அமைச்சர் மறுசீரமைப்பில் அவர் எப்படி தலையிட முடியும்? மறுசீரமைப்பு தொடர்பாக ஆளுநர் உட்பட ஒரு வார்த்தை கூட கூற முடியாது. அண்ணாமலை தன்னைத் தானே ஒரு பெரிய தலைவராகக் கருதுவதும் ஒரு பெரிய சிரிப்பு” எனக் குறிப்பிட்டுள்ளார். 

பாஜக தலைமைக்கும், நடிகை காயத்ரி ரகுராமுக்கும்  இடையே அண்மைக்கலமாக கருத்துமோதல் இருந்து வருகிறது.  சூர்யா சிவா, டெய்சி சரண் விவகாரத்தில் கருத்து கூறியதற்காக அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவர் கட்சியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடதக்கது.