ஐயோ uncle..நான் கட்சியை வளர்க்கல; முதலில் கட்சி நமக்குள் வளரணும்! கங்கை அமரனுக்கு காயத்ரி விளக்கம்

 
உ

ஐம்பது பேர் கொண்ட பாஜகவினர் முன்னிலையில் துபாயில் ஹோட்டலில் திமுகவினருடன் காயத்ரி ரகுராம் ஆட்டம் போட்டார் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார் என்று காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.   இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள்,  எவ்வளவோ கேவலமாக பேசிய திருமாவளவனையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் நேரில் சந்தித்து சால்வை போட்டு வாழ்த்த முடியுது.  அப்படி என்ன பேசிவிட்டார் அண்ணாமலை இவ்வளவு ஆவேசம்? என்று கேட்டு வருகின்றனர்.

அக்

 அந்த அளவிற்கு அண்ணாமலையையும் தமிழக பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் காயத்ரி.  இதை பார்த்து கடுப்பான பிரபல இசை அமைப்பாளரும் பாடலாசிரியரும் பாஜக ஆதரவாளருமான கங்கை அமரன்,  ‘’ஏம்மா?  நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே நீ டைரக்ட் பண்ணிருக்ர படமே ஒன்னால ஒழுங்கா பண்ணத்தெரியல ? நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத.  இது நான் உங்கப்பாவோட ஒண்ணா வளர்ந்த உன் சித்தபாங்கற முறையில சொல்றேன் …’’என்று  அறிவுறுத்தி இருக்கிறார்.

க்க்

 இதற்கு காயத்ரி ரகுராம், ‘’ஐயோ uncle நான் கட்சியை வளர்க்கவில்லை. என்னால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சி நமக்குள் வளர வேண்டும்.  ஆனால் அது என்னைப் பொருத்தவரை வளரத் தவறிவிட்டது. அதனால் தான் கட்சியை விட்டு வெளியேறினேன். நான் நல்ல இயக்குனராகவும் இல்லை, நான் பந்தா செய்ய பெரிய பிரபலம் இல்லை. நான் என் தந்தையைப் போல ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நல்ல உள்ளம் என்னிடம் உள்ளது. 

அதே வழியில் நான் மக்களுக்கு உதவி செய்து பாதுகாத்தால் .. இது நான் நிறைவேற்றினால் அது எனக்கு மிகப்பெரிய சாதனை. I’m no one but I will be voice of many. அது அப்பா மீதான வாக்குறுதி. தயவு செய்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் uncle.நான் என் தந்தையைப் போல இருக்க என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். நான் என்ன செய்கிறேனோ அது சுத்தமாகவும் உண்மையாகவும் இருக்கும் என்று நம்பிகிறேன். அதுவே என் விருப்பம். எந்தத் துறையாக இருந்தாலும் என் தந்தை ஒரு தலைவராகப் பார்த்து வளர்ந்தேன். தங்க ஆன்மா.. உங்களுக்கு தெரியும் uncle’’என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.