சவுக்கு சங்கரை பாஜக தலைவராக்குங்கள்- காயத்ரி ரகுராம்

 
காயத்ரி ரகுராம் சவுக்கு சங்கர்

தயவுசெய்து சவுக்கு அண்ணாவை பாஜக தலைவராக  பரிந்துரைக்குமாறு பாஜகவிலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். 

Gayathri Raghuram Vs Annamalai : சவுக்கு சங்கர்,அண்ணாமலை, கர்நாடகா.. பெரிய  லிஸ்ட்டா இருக்கே! பாஜகவை வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்

தமிழக பாஜகவுக்கு தலைவராக அண்ணாமலை வந்தது முதல் அவருக்கும் கட்சியில் இருந்த நடிகை காயத்ரி ரகுராமுக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. கட்சியிலிருந்து விலகிய பின்னர், அண்ணாமலையை விமர்சிப்பதையே தனது முழு நேர வேலையாக வைத்துள்ளார் காயத்ரி ரகுராம். பிடிஆர் ஆடியோ வெளியான பின்பு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரையும் கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டார் காயத்ரி ரகுராம்.இந்நிலையில், நேற்று நடைபெற்ற அமித்ஷா- எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு தொடர்பான புகைப்படத்துடன்  பாஜகவிற்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளை முன்கூட்டியே முடிவு செய்யுமாறு எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தியதாக வெளியான தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “ரேகார்டிங் ராஜா அண்ணாமலை, உங்கள் முதலாளி சவுக்கு சங்கர் அண்ணாவை இந்தக் கூட்டத்திற்கு அவரை அழைத்துச் செல்லவில்லை? பாஜகவும் அதிமுகவும் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வதாக அண்ணாமலை நீங்கள் கூறியதால் தயவுசெய்து சவுக்கு அண்ணாவை பாஜக தலைவராக  பரிந்துரைக்கவும். சவுக்கு தலைவராக ஆக்கினால் அண்ணாமலை விட பாஜகவுக்கு அதிக வாக்குகளை கொண்டு வரும் திறமை சவுக்கு சகோதரனுக்கு உள்ளது. அண்ணாமலை எப்படியும் வியூகம் மற்றும் வாக்குகள் மற்றும் விளம்பரத்திற்காக சவுக்கு அண்ணாவை சார்ந்து இருக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.