உங்களுக்கும் என் நிலைமை தானா? ஆர்.எஸ்.பாரதிக்கு காயத்ரி ரகுராம் கேள்வி
சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னா படத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுகவில் உழைக்காதவர்களுக்கு பதவி கிடைத்துள்ளது எனவும் உழைத்தும் பதவி கிடைக்கவில்லை என ஆதங்கத்துடன் இருப்பது நியாயம் தான் என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும், உழைத்தவர்களுக்கு சீட் இல்லை, உழைக்காதவர்கள் பதவிக்கு வந்துள்ளதாகவும் விமர்சனத்துக்குள்ளானது. அதுமட்டுமின்றி கட்சிக்கு நான் அழைத்துவந்தவர்கள் எல்லாம் எம்.எல்.ஏ, மந்திரி ஆகிவிட்டதாக ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார். கட்சிக்கு உண்மையாக இருப்பவர்களை ஒதுக்கத்தான் செய்வார்கள் எனவும், ஒரே கட்சி, ஒரே கொடி என இருந்த எனக்கு 63 வயதில் தான் எம்.பி. பதவி கிடைத்தது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
nullTelling ones feelings is ones rights. Criticism should be taken in good way wether outside or inside. pic.twitter.com/DXFoUDAD9l
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) December 3, 2022
இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், “உணர்வுகளைச் சொல்வது அவரவர் உரிமை. விமர்சனம் வெளியில் இருந்தாலும் உள்ளே இருந்தாலும் நல்ல முறையில் எடுத்துக்கொள்ள வேண்டும். என்ன ஆர்.எஸ்.பாரதி சார் வெளிப்படையாக விமர்சித்து கருத்தும் கூறினீர்கள். உங்கள் திமுக கட்சிக்கு களங்கம் கொண்டு வரலாமா? உள் கட்சியின் பிரச்சினை சார். நீங்கள் வெளியே பேச முடியாது. உங்களுக்கும் என் நிலைமை தானா என்று பார்ப்போம் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.