பா.ஜ.க.வின் பி-டீம்.. ஆம் ஆத்மி எங்கு போட்டியிட்டாலும் பா.ஜ.க.வை பதவியில் அமர வைப்பதுதான் இலக்கு.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

பா.ஜ.க.வின் பி.டீம். ஆம் ஆத்மி. அந்த கட்சி எங்கு போட்டியிட்டாலும் பா.ஜ.க.வை பதவியில் அமர வைப்பதுதான் இலக்கு என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கம் பெரும்பான்மை கிடைக்காததால் சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று சண்டிகர் மாநகராட்சியில் தேர்தலில் காங்கிரஸிலிருந்து சார்பில் போட்டியிட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி கவுன்சிலர் ஹர்பிரீத் கவுர் பாப்லா பா.ஜ.க.வில் இணைந்தார். இது பா.ஜ.க.வுக்கு சாதமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.

இந்நிலையில் நேற்று சண்டிகர் மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் சரப்ஜித் கவுர், ஆம் ஆத்மி சார்பில் அஞ்சு கத்யால் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். மேயர் தேர்தலில் மொத்தம் 28 ஒட்டுக்கள் பதிவாகின. இனையடுத்து பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. பா.ஜ.க.வுக்கு 14 வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 13 வாக்குகளும், ஒ வாக்கு செல்லாது என்று அதிகாரி அறிவித்தார். இதனையடுத்து சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ஜ.க. சார்பாக போட்டியிட்ட சரப்ஜித் கவுர் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆம் ஆத்மி
காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் கம்யூனிகேஷன் மற்றும் சமூக ஊடகங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பாண்டி டிவிட்டரில் ஆம் ஆத்மி கட்சியின் ஒரு வாக்கு ரத்து செய்யப்பட்டு, பா.ஜ.க.வுக்கு இடம் கிடைப்பது (மேயர்பதவி) உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க.வின் பி-டீம் அதன் இலக்கை அடைந்து விட்டது. ஆம் ஆத்மி கட்சி எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும் இதைத்தான் சாதிக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.