காந்தி குடும்பத்துக்கு அடிபணிவதே முன்னுரிமை.. அன்று மன்மோகன் இன்று பஞ்சாப் முதல்வர் செய்கிறார்.. பா.ஜ.க.

 
பா.ஜ.க.

காந்தி குடும்பத்துக்கு அடிபணிவதே காங்கிரஸ் தலைவர்களின் முன்னுரிமை, அன்று மன்மோகன் சிங் செய்ததை இன்று பஞ்சாப் முதல்வர் செய்கிறார் என்று பா.ஜக. குற்றம் சாட்டியுள்ளது.

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று, பிரதமர் மோடியின் பாதுகாப்பு மற்றும் அவரது வருகை பற்றிய அனைத்து முக்கியமான, மிகவும் ரகசியமான விவரங்களையும் பிரியங்கா காந்தியுடன் பகிர்ந்து கொண்டதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் கூறியுள்ளார். அரசியல் சாசனத்தின் கீழ் முதல்வர் பதவிப் பிரமாணம் செய்துள்ளதால் இது மிகவும் தீவிரமான விஷயம். 

கவுரவ் பாட்டியா

பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் மிகவும் ரகசியமான தகவல்களுடன் தொடர்புடையது. பிரதமரின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய விவரங்களை முதல்வர் தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்ற  அரசியல் சாதன பதவி எதையும் பிரியங்கா காந்தி கொண்டிருக்கவில்லை. ஒரு காங்கிரஸ் தலைவருக்கு, காந்தி குடும்பத்துக்கு அடிபணிவதே முன்னுரிமை, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்துக்கு அல்ல என்பதை இது தெளிவாக காட்டுகிறது. 

பிரியங்கா காந்தி
அவர்கள் காந்தி குடும்பத்தின் நலன்களை கவனிப்பார்கள். ஆனால் நாட்டின் நலனை கவனிக்க மாட்டார்கள். அவர்கள் காந்தி குடும்பத்தின் வழிகாட்டுதலின்கீழ் செயல்படுவார்கள், ஆனால் அரசியலமைப்பின் கீழ் தங்கள் பொறுப்பை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இந்த போக்கு மன்மோகன் சிங்கிடம் இருந்து தொடர்கிறது. அவர் நாட்டின் பிரதமராக இருந்த போது சோனியா காந்திஜியிடம் தொடர்ந்து அறிக்கை செய்தார். இப்போது அந்த மாதிரியை முதல்வர் சன்னி, பிரியங்கா காந்தியிடம் அறிக்கை செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.