ஏம்மா! நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே..காயத்ரிக்கு கங்கை அமரன் கண்டிப்பு
நான் உங்கப்பாவோட ஒண்ணா வளர்ந்த உன் சித்தபாங்கற முறையில சொல்றேன் என்று நடிகை காயத்ரி ரகுராமுக்கு அறிவுறுத்தி இருக்கிறார் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன்.
தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை தலைவராக வந்தது முதல் காயத்ரி ரகுராமுக்கும் அவருக்குமான மோதல் தொடர்ந்து வந்திருக்கிறது. திருச்சி சூர்யா சிவா டெய்சி சரண் ஆடியோ விவகாரத்தில் இந்த மோதல் உச்சகட்டத்திற்கு சென்றது. சூர்யா சிவா ஆடியோவை விவகாரத்தில் அவருக்கு கண்டனம் தெரிவித்து, அந்த விவகாரத்தில் தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார் காயத்ரி ரகுராம் .
இதனால் காயத்ரி ரகுராமை கட்சி பொறுப்பில் இருந்து ஆறு மாதம் தள்ளி வைத்திருந்தார் அண்ணாமலை. ஆனால் 6 நிமிஷம் கூட பொறுக்க முடியாமல் தொடர்ந்து அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தார் காயத்ரி ரகுராம்.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய மத்திய இணை அமைச்சருமான எல். முருகனின் ஆதரவாளர் காயத்ரி. அண்ணாமலைக்கு எதிராக காய் நகர்த்துகிறார் முருகன். அதற்கு துணை போகிறார் காயத்ரி என்று சூர்யா சிவா குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரம் பெரிதானபோது பதிலுக்கு அண்ணாமலையையும் அவரது ஆதரவாளர்களும் காயத்ரி ரகுராம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இதனால் பாஜகவில் இருந்து தானாகவே வெளியேறினார் காயத்ரி ரகுராம் .
அதன் பின்னரும் அண்ணாமலை, பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம். இந்த நிலையில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பாஜகவிற்கு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது . பாஜகவின் தேசியத் தலைவர் இதை திறந்து வைத்துள்ளார்.
கட்டிடங்கள் அளவில் மட்டுமே பாஜக வளர்கிறது. பாஜக தமிழகத்தில் வளரவே இல்லை என்பதை குறிப்பிடும் விதமாக, ‘’தமிழக பாஜகவுக்கு நிச்சயமாக உள்கட்டமைப்பில் (கட்டிடம் மட்டும்) வளர்ச்சி. ஆனால், அண்ணாமலை தலைமையில் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கட்டிடத்திற்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், கூடிய விரைவில் கட்டப்படும் என நம்புகிறேன்’’ என்று விமர்சித்து இருந்தார் காயத்ரி ரகுராம் .
இதற்கு பிரபல திரைப்பட இசை அமைப்பாளரும், இயக்குநரும், பாடல் ஆசிரியரும், பாஜக ஆதரவாளருமான கங்கை அமரன், ‘’ஏம்மா? நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே நீ டைரக்ட் பண்ணிருக்ர படமே ஒன்னால ஒழுங்கா பண்ணத்தெரியல ? நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத. இது நான் உங்கப்பாவோட ஒண்ணா வளர்ந்த உன் சித்தபாங்கற முறையில சொல்றேன் …’’என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
10 மாவட்டங்களில் பாஜக கட்டிடங்கள்.
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) March 10, 2023
தமிழக பாஜகவுக்கு நிச்சயமாக உள்கட்டமைப்பில் (கட்டிடம் மட்டும்) வளர்ச்சி. ஆனால், அண்ணாமலை தலைமையில் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள்.
மதுரை எய்ம்ஸ் கட்டிடத்திற்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், கூடிய விரைவில் கட்டப்படும் என… https://t.co/63JWbUNcoe pic.twitter.com/wphUbRzpwD