பள்ளிகளை மீண்டும் திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும்… அதனால அனைத்து மாணவர்களையும் பாஸாக்கி விடுங்க.. குமாரசாமி

பள்ளிகளை மீண்டும் திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும்… அதனால அனைத்து மாணவர்களையும் பாஸாக்கி விடுங்க.. குமாரசாமி

கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும், அதனால் அனைத்து மாணவர்களையும் முந்தைய செயல்திறன் அடிப்படையில் தேர்ச்சி (பாஸ்) செய்யுங்கள் என அம்மாநில அரசை குமாரசாமி வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. கர்நாடகாவில் அண்மையில் உயர் நிலை பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தை தொடர்ந்து அடுத்த நாட்களிலேயே பள்ளிகளை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டது. கலபர்கி மாவட்டத்தில் மாஷாலா கிராமத்தில் டியூசன் சென்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளிகளை மீண்டும் திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும்… அதனால அனைத்து மாணவர்களையும் பாஸாக்கி விடுங்க.. குமாரசாமி
எச்.டி. குமாரசாமி

இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய அம்மாநில முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, தொடக்க கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் ஆகியோர் ஆன்லைனில் சந்திப்பு ஒன்றை நடத்தினர். ஆனால் இந்த ஆண்டு பள்ளிகளை திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும் என அம்மாநில முன்னாள் முதல்வர் குமராசாமி கர்நாடக அரசை எச்சரிக்கை செய்துள்ளார். இது தொடர்பாக மத சார்ப்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி. குமாரசாமி கூறியதாவது:

பள்ளிகளை மீண்டும் திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும்… அதனால அனைத்து மாணவர்களையும் பாஸாக்கி விடுங்க.. குமாரசாமி
பி.எஸ்.எடியூரப்பா

இந்த சூழ்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பேரழிவுக்கு வழிவகுக்கும். மக்களின் வாழ்க்கை மீது முதல்வருக்கு அக்கறை இருந்தால் எந்த காரணம் கொண்டும் இந்த ஆண்டு பள்ளிகளை திறக்கக்கூடாது. முந்தைய செயல்பாடு மற்றும் செயல்திறன் அடிப்படையில் அனைத்து மாணவர்களையும் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி செய்ய வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை 2021ம் ஆண்டு தொடங்க வேண்டும். டியூஷன் சென்டர்களில் கோவிட்-19 பாதிப்புகள் ஏற்பட்டு வரும் வேளையில், பள்ளிகளை மீண்டும் திறப்பை நோக்கி மாநில அரசு செல்வது பெற்றோர்களிடம் கவலையை உருவாக்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.