புது கட்சியை தொடங்குகிறார்?... காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

 
குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்கு செல்லலாம்: உச்ச நீதி மன்றம்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தான் புதிதாக கட்சியை தொடங்க உள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத் கடந்த சில தினங்களாக ஜம்மு அண்டு காஷ்மீர் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். இதனால் குலாம் நபி ஆசாத் விரைவில் காங்கிரசிலிருந்து வெளியேறுவார் என்றும், தனிக் கட்சி தொடங்கி போகிறார் என்றும் யூக செய்திகள் வெளிவருகிறது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்யக்கோரி கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி23 தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனியா காந்தி

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனி கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகி உள்ள வதந்தியை குலாம் நபி ஆசாத் மறுத்துள்ளார். அதேசமயம் அரசியல் அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று குலாம் நபி ஆசாத் பொடி வைத்து பேசியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் காஷ்மீர் காங்கிரசில் சீர்த்திருத்தம் கோரி குலாம் நபி ஆசாத் ஆதரவாளர்கள் 20 பேர் தங்களது கட்சி பதவியை ராஜினாமா செய்தனர்.

காங்கிரஸ்

குலாம் நபி ஆசாத் அண்மையில் பேட்டி ஒன்றில், 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதிகளை எங்களால் கைப்பற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் விரும்புகிறேன், கடவுள் விரும்பினால் இந்த இலக்கை நாம் அடைய முடியும், ஆனால் வாய்ப்புகள் மங்கலானது என்று தெரிவித்தார். இது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.