மாஜி துணை முதல்வர் பாஜகவில் இருந்து விலகல்

 
l

முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி பாஜகவில் இருந்து விலகி உள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.  கர்நாடக பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.   சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்காததால் தான் அவர் பாஜகவில் இருந்து விலகி இருக்கிறார் .

கர்நாடக மாநிலத்தில் வரும் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.  இதற்காக காங்கிரஸ் கட்சி இரண்டு கட்டங்களாக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறது.  மீதம் இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் விவரங்களை விரைவில் வெளியிடும் என்று தெரிகிறது . பாஜகவும் முதற்கட்டமாக 198 வேட்பாளர்களின் பட்டியலை நேற்று இரவு வெளியிட்டுள்ளது. 

sa

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தாராமையாவை எதிர்த்து முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகின்றனர். ஷிகாரி புரா தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூப்பாவின் மகன் விஜயந்திரா வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார்.  அத்தாணி தொகுதியில் 2018 ஆம் ஆண்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட லக்ஷ்மன் சவடிக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.  இதனால் இந்த தொகுதியில் மகேஷ் குமத்தல்லியை வேட்பாளராக களம் இறக்கி இருக்கிறது பாஜக.  இதில் ஏற்பட்ட அதிருப்தியால் பாஜகவில் இருந்து லக்ஷ்மன் சவடி விலகி இருக்கிறார்.

 கடந்த பாஜக ஆட்சியில்  துணை முதல்வராக பொறுப்பு வகித்த லட்சுமன் சவடி தனது விலகல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது,   நான் என் முடிவை எடுத்து இருக்கிறேன்.   நான் பிச்சை பாத்திரத்துடன் சுத்துபவன் அல்ல.  யாரிடமும் பிச்சை கேட்க மாட்டேன் . சுயமரியாதை உள்ள அரசியல்வாதி நான்.  யாருடைய செல்வாக்கிலும் நான் செயல்பட மாட்டேன் என்று அழுத்தமாக கூறியிருக்கிறார். 

 அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். லட்சுமன், லிங்காயத் சமூக தலைவராக இருப்பதால் அவர் விலகல் பாஜகவின் வாக்கு சதவிகிதம் பாதிக்கப்படும் என்று அக்கட்சியினர் நினைக்கின்றனர்.