தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

 
தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை

 

அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்தார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்தார். செம்மலைக்கு கட்சி துண்டு அணிவித்து அவரை வரவேற்றார் முதல்வர் விஜய். செம்மலை கொண்டு வந்த கட்சியின் துண்டை வாங்கி அவர் கழுத்தில் போட்டு கட்சியில் சேர்த்துக் கொண்டார் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய். கடந்த மே மாதம் அதிமுகவில் இருந்து விலகிய நிலையில், 4 மாதங்களுக்கு பின் செம்மலை கட்சி மாறியுள்ளார். 4 முறை எம்.எல்.ஏவாகவும், ஒரு முறை எம்பியாகவும் இருந்துள்ள செம்மலை, 2001ல் அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த செம்மலை, சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகினார். அதிமுகவில் தமக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகக் கூறி விலகிய அவர், தற்போது தனது மகனின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், தவெக தலைமையின் அழைப்பை ஏற்றும் இம்முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த தலைவரான செம்மலையின் வருகை, தவெக-விற்கு சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கூடுதல் பலமாக அமையும் என அக்கட்சி தலைமை நம்புகிறது. குறிப்பாக சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தவெகவிற்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன