விவேகானந்தரின் பிறந்தநாளை கொண்டாடுகிறது அவரின் சித்தாந்தத்தை பின்பற்றவில்லை.. பா.ஜ.க.வை தாக்கிய மம்தா கட்சி

 
வீடுகளில் விவேகானந்தர் படத்தை தொங்கவிட்டால் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான்.. திரிபுரா முதல்வர்

விவேகானந்தரின் பிறந்தநாளை கொண்டாடும் பா.ஜ.க., அவரின் சித்தாந்தத்தை பின்பற்றவில்லை என்று பா.ஜ.க.வை திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 25வது தேசிய இளைஞர்  விழாவை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில், சுவாமி விவேகானந்தரின் சித்தாந்தத்தை பா.ஜ.க. பின்பற்றவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

பா.ஜ.க.

மேற்கு வங்க அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், மேற்கு வங்க அரசு சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை இளைஞர்கள் தினமாக கொண்டாடுகிறது. பா.ஜ.க. சுவாமி விவேகானந்தர் பெயரில் இந்த தினத்தை கொண்டாடுகிறது. ஆனால் அவர்கள் அவருடைய (விவேகானந்தர்) சித்தாந்தத்தை பின்பற்றவில்லை. அவர்கள் பிரித்தாளும் கொள்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிர்ஹாத் ஹக்கீம்

கோவிட்டை பொறுத்தவரை, நாங்கள் எல்லா சூழ்நிலைகளுக்கும் தயாராக இருக்கிறோம். நமது நிலை உத்தர பிரதேசம் போல் இல்லை, அங்கு (உத்தர பிரதேசம்) அவர்கள் இரட்டை எஞ்சின் அரசாங்கம் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். மேற்கு வங்கத்தில் நாங்கள் தயாராக இருக்கிறோம். சரியான நேரத்தில் ஆய்வு கூட்டங்களை நடத்துகிறோம். கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராட நம்மிடம் போதுமான ஏற்பாடுகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.