கடுப்பான ஆதரவாளர்கள் - காயத்ரி மீதான புகாரை வாபஸ் பெறச்சொன்ன அண்ணாமலை

 
aக்

தமிழக பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்த காயத்ரி ரகுராம் கட்சி தலைமையை கடுமையாக விமர்சித்து வந்தார்.   கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தலைமையை எந்த அளவுக்கு விமர்சிக்கக் கூடாதோ அந்த அளவுக்கு விமர்சித்து தலைமையை ரொம்பவே வெறுப்பேற்றி வந்தார் . இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுத்து வந்தனர்.  அண்ணாமலையும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் காயத்ரி ரகுராமை வெளுத்து வாங்கினார்.

அ

 இதனால் கட்சிக்குள் இருந்து தாக்கு பிடிக்க முடியாமல் வெளியேறினார் காயத்ரி ரகுராம்.   அதன் பின்னர் அண்ணாமலையை விமர்சிப்பது மட்டும்தான் தனது முழு நேர வேலை என்று எண்ணிக் கொண்டு,  தொடர்ந்து அவர் பற்றி கடுமையாக விமர்சித்து வருகிறார்.  இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்களும் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்து வருவதால் கடுப்பாகி போன அவரின் ஆதரவாளர்கள் சைபர் கிரைமில் காயத்ரி ரகுராம் மீது புகார் அளித்துள்ளனர். அண்ணாமலை குறித்து அவதூறு பரப்பி வருவதாக காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர்.

க்ச்

தமிழக பாஜகவின் வழக்கறிஞர் அணியினர் இந்த புகாரை கொடுத்துள்ளனர்.   பின்னர் அண்ணாமலை,  இது தேவையில்லை . புகாரை வாபஸ் பெற்று விடுங்கள் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து வழக்கறிஞர் அணி துணை தலைவர் ஜி. எஸ். மணி புகாரை வாபஸ் பெற்றதாக தெரிவித்துள்ளார்.