‘சாட்டை துரைமுருகன் ஆதிக்கம் செலுத்துகிறார்”... நாதகவிலிருந்து கூண்டோடு விலகிய நிர்வாகிகள்

 
சீமான்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் அக்கட்சி பொறுப்பாளர்கள் 32 பேர் சாட்டை துரைமுருகன் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறி கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளனர். 

சீமான்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 32 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கும் அறிக்கை ஒன்றினை நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் வெளியிட்டார். பின்னர் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்களிடமிருந்த நாம் தமிழர் கட்சி அடையாள அட்டையை தெற்கு மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியனிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து தங்களது அரசியல் பயணம் குறித்து அடுத்த கட்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுப்பதாக தெரிவித்தனர். 

நாம் தமிழர் கட்சியிலிருந்து குறித்து வெளியேறியது குறித்து சுப்பையா பாண்டியன் கூறுகையில், “தூத்துக்குடி தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளராக உள்ளேன். 2009 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் 15 ஆண்டுகளாக பயணம் செய்து கொண்டிருக்கிறேன். 2016 சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும் 2021 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டு உள்ளேன். தொடர்ந்து 15 ஆண்டுகளாக பயணம் செய்தும் சிறிய மரியாதை கூட இல்லை. கட்சி தொடர்பாக எந்த ஒரு ஆலோசனையும் எங்களோடு செய்யாமல் குறைந்தபட்ச மரியாதை கூட இல்லாத நிலை உள்ளது. உண்மையான தமிழ் தேச ஈடுபாடுடன் கட்சியில் பயணித்தோம். ஆனால் தற்போது தமிழ் தேச ஈடுபாடு இல்லாதவர்கள் கட்சியில்  ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் கட்சியில் வரும்போது அவர்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ் தேச உணர்வாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளனர்.  நாங்கள் விலகுவதற்கு முக்கிய காரணம் சாட்டை துரைமுருகன் தான். கட்சியில் எனக்கு ஜூனியர் ஆனவர் கட்சியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.  

இறைதூதரே திமுகவுக்கு ஓட்டு போடாதீங்னு சொன்னாக்கூட முஸ்லீம் கேட்க மாட்டாங்க- சீமான்

கடந்த 23 டிசம்பர் மாதம் மழை வெள்ளத்திற்கு பிறகு நிவாரணம் கொடுக்க சீமான் வருகை தந்த போது இப்பகுதியில் உள்ள வெள்ளூர், பத்மநாபமங்கலம், பராக்கிரமப்பாண்டி உள்ளிட்ட பஞ்சாயத்துகளில் எங்களிடம் எந்தவித ஆலோசனையும் செய்யாமல் சமூக ரீதியான பஞ்சாயத்து தலைவர்களிடம் சாட்டை துரைமுருகன் நேரடியாக பஞ்சாயத்து தலைவர்களிடம் பேசி நிவாரணம் வழங்கினார். வெள்ளூரில் கட்சி நிர்வாகிகளிடம் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் சாட்டை துரைமுருகன் உறவினரான திமுக மாவட்ட பொறுப்பாளர் இல்லத்தில் வைத்து நிவாரண பொருட்களை வழங்கினார்.  கட்சி நிர்வாகிகள் குறித்து நாங்கள் ஒரு பட்டியல் கொடுக்கும்போது அதனை சாட்டை துரைமுருகன் அலட்சியப்படுத்துவார்.  எங்களோடு 32 பொறுப்பாளர்கள் தற்போது கட்சியிலிருந்து விலகி உள்ளனர், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்” என்றார்.