எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்த செயற்குழு கூட்டம் – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்த செயற்குழு கூட்டம் – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு

அதிமுக செயற்குழு கூட்டம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சலசலப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பு கை ஓங்கியதில் ஓ.பி.எஸ் தரப்பு செம அப்செட் ஆகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்த செயற்குழு கூட்டம் – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு

கூட்டம் தொடங்கும் முன்னரும், கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமியை முன்வைத்தே நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் , ஓ. பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடக்கும் பனிப்போரை முடிவுக்கு கொண்டு வரும் என்றும், யாருக்கு நிர்வாகிகள் செல்வாக்கு உள்ளதை என்பது உணர்த்தும் பலப்பரீட்ச்சை என்றும் கூறப்பட்டது.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்த செயற்குழு கூட்டம் – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு

ஆனால், கூட்டத்தின் போக்கை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி அறிவிப்புக்கு கட்டுப்படும் கூட்டம் போலவே இருந்தது. கூட்டத்துக்கு ஓ.பன்னீர் செல்வத்தின் முகமூடி அணிந்தபடி தொண்டர்கள் வருகை தந்தாலும், அவர் வந்தபோது முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவேற்பு அளிக்கவில்லை. தொண்டர்களின் முழக்கங்களும் குறைவாகவே இருந்தன. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் மகளிரணியினரை சுத்தமாக பார்க்க முடியவில்லை. ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், தென் சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் பாபு ஆகியோர் மட்டுமே ஓ.பி.எஸ் வரும்போது வரவேற்பு அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்த செயற்குழு கூட்டம் – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு

எடப்பாடி பழனிசாமி வரும்போது, கூட்டம் கட்டுக்கடங்காமல் திமிறி உள்ளது. நிரந்தர முதல்வர் கோஷங்களும் விண்ணை பிளந்தன. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் முகமூடி அணிந்து வந்தனர் என்றால், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒருபடி மேலே சென்று நிரந்தர முதல்வர் என்கிற பேனர்களை தயாரித்து கொண்டு வந்தனர். தலைமை கழக நிர்வாகிகளும், கட்சி மூத்த நிர்வாகிகளும், மகளிரணியினரும் மொத்தமாக திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். எடப்பாடி பழனிசாமி வருகைக்காக காத்திருந்து வரவேற்பு அளித்ததை பார்க்க முடிந்தது.

கூட்டம் தொடங்குவதற்கு முன் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிதான் முதலில்
மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின்னர்தான் ஓ.பி.எஸ்க்கு வாய்ப்பு அளிக்கப்படுள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்த செயற்குழு கூட்டம் – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு

கூட்டத்திலும், ஓ.பி.எஸ், இ.பிஎ.ஸ் என இரண்டு பேருக்கும் நிர்வாகிகள் வணக்கம் வைத்தாலும், எடப்பாடி பழனிசாமிக்கு வைத்த வணக்கம், ஏற்கெனவே மறைந்த தங்கள் கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு காட்டிய பணிவு இருந்துள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களிலும் தமிழக அரசுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாகவே இருந்தன. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களை அழகாக அமைத்தற்கு நன்றி தெரிவித்தும், ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றியதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க ஒற்றுமையாக கட்சி வேலைகளை செய்வோம் என கடைசி தீர்மானம் சொன்னாலும், நடந்தது என்னவோ எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு , அவர் சொல்வதை கேட்டும் கூட்டமாகவே நடந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னுரிமை அளித்த செயற்குழு கூட்டம் – அதிர்ச்சியில் ஓ.பி.எஸ் தரப்பு

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ் இருந்தாலும், செயற்குழு நிகழ்வு எல்லாம் எடப்பாடி கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது. பிறகு என்ன முதல்வர் வேட்பாளர் யார் என்பதை சொல்லவும் வேண்டுமா என்பதே நிர்வாகிகள் தொண்டர்களின் கருத்தாக உள்ளது.