அதிமுகவில் இணையவில்லை! பாஜகவில்தான் இருக்கிறேன்!! முன்னாள் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி

 
mla

நிமித்தமாக மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்சை சந்தித்தேன் என்றும் மீண்டும் அதிமுகவில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பேட்டியளித்துள்ளார்.

admk

பாஜகவில் சமீபத்தில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலையடுத்து மதுரையில் மாணிக்கம் செய்தியாளர்களை சந்தித்தித்தார். 

அப்போது பேசிய மாணிக்கம், "நான் மீண்டும் அதிமுகவில் இணைந்தேன் என்கிற தகவல் தவறானது, தற்போது பாஜகவில் தான் உள்ளேன், மரியாதை நிமித்தமாக மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ்சை சந்தித்தேன், மீண்டும் அதிமுகவில் செல்வதற்கு வாய்ப்பு இல்லை, பாஜக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவேன், பிரதமர் தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன்.

அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நான் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணையவில்லை, அதிமுகவும் - பாஜகவும் ஒத்த கருத்துடன் தான் செயல்படுகிறது, தமிழகத்தில் தீய சக்தியை விரட்டி அடிக்க பாஜக - அதிமுக கூட்டணி உழைக்கும், பாஜக - அதிமுக கூட்டணி என்றுமே உடையாது, அதிமுக, பாஜக கூட்டணியில் இருப்பதால் நான் இரு கட்சிகளிலும் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன், என்னுடைய உழைப்பு தேவை என அதிமுக நினைக்கிறது, அதனால் கூட தவறாக புகைப்படம் பரப்பப்படும். 

ஒரு தாய் வீட்டு பிள்ளைகள் நாங்கள், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும், பாஜக - அதிமுக கூட்டணி தொடர வேண்டும், இந்த கூட்டணி தமிழகத்தை ஆள வேண்டும், அதிமுக - பாஜக கூட்டணி உடையாது, உடைந்தால் அன்று என்னுடைய முடிவை தெரிவிக்கிறேன், பாஜகவுடன் நட்பில் இருந்தவர் ஜெயலலிதா, அதிமுக பாஜக கூட்டணியில் இருக்கிறது, எனவே கட்சி மாறியதில் சிக்கல் இல்லை" எனக் கூறினார்.