#BREAKING தவெக பட்டியலில் நிரம்பி வழியும் 'ex அதிமுக'

 
s

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியில் கட்சி தாவியவர்களுக்கு தவெகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

s

அதன்படி, அதிமுகவை சேந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா, திருப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அதிமுகவில் இருந்து வெளியேறிய முன்னாள் சபாநாயகர் மகன் லோகேஷ், ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2024ம் ஆண்டு ஊட்டி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்.

2016ம் ஆண்டு அதிமுகவில் எம்.எல்.ஏ.வாக இருந்த தூசி மோகன், செய்யாறு தொகுதியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கியுள்ளார். 2019ம் ஆண்டு நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்ற ரெட்டியார்பட்டி நாராயணன், நாங்குநேரி தொகுதியில்  போட்டியிடவுள்ளார். அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகருக்கு ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபியிலும், கு.ப. கிருஷ்ணன் லால்குடியிலும், சுப்ரமணியன் கந்தர்வக்கோட்டையிலும் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர்.