அதிமுகவின் பிரச்சனைக்கு மோடி, அமித்ஷாவுமே காரணம் - ஈவிகேஎஸ் இளங்கோவன்

 
evks elangovan

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக விவகாரத்தில் மோடியும், அமிஷ்தாவின் தலையீடு இருந்து வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் இளங்கோவன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

An FIR and a bust made of cowdung now hounds EVKS Elangovan | The News  Minute

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 52 வது பிறந்தநாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.தலைமையில் கேக் வேட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, துணைத் தலைவர்கள் பொன் கிருஷ்ணமூர்த்தி, கோபண்ணா, ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர் சிரஞ்சீவி, ரங்கபாஷ்யம், எஸ்.ஏ‌.வாசு, எஸ்.காண்டீபன், முன்னாள் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாவட்ட தலைவர் நாமே ராமச்சந்திரன், மாநில செயலாளர்கள் ஏ.வி.எம்.ஷெரீப், அகரம் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “ பாஜக வருகின்ற தேர்தலில் மீண்டும் வந்தால் இந்திய துணை கண்டம் இல்லாமல் போய்விடும். மக்கள் நிம்மதியை இழக்க நேரிடும். பாஜகவை ஒழிக்க வேண்டும். நாட்டின் சுதந்திரத்தை காப்பாற்றுவதில் மற்றவர்களைவிட நமக்கு கடமை அதிகம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக விவகாரத்தில் மோடியும், அமிஷ்தாவின் தலையீடு இருந்து வருகிறது. அதிமுக உள்ள பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் பாஜக காரர்கள். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாயும், நாக்கும் அதிகம். பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார். எப்படியாவது எதிர்கட்சியாக வரவேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரவுடிகளையும் பாஜக சேர்த்து உள்ளார்கள். காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் முடிந்தபிறகு, பாஜகவை தமிழகத்தில் வளர விடக்கூடாது. தமிழகத்தைவிட்டு துரத்த வேண்டும் இதுதான் நமக்கு முதல் வேலை. 

ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மையமாக கொண்டு வரவேண்டும் என்று தான் இந்தியாவில் புதிதாக அக்னிபத் திட்டத்தை கொண்டு வருகிறார்கள். நாடு காவிமயகாக மாற்ற முயற்சி நடக்கிறது. 4 வருடங்கள் ராணுவத்தில் சேர்ந்து இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ் பக்கம் மாற்றவேண்டும் என்று மோடி முயற்சி செய்கிறார். மோடியை அடுத்த முறை பிரதமராக விடக்கூடாது.  பாஜக அமலாக்கத்துறை மூலம் தொடர்ந்து பழி வாங்கி வருகிறது. இதனைத் தொடர்ந்து சண்டை என்றால் சட்டி கூடியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்தது இயல்பு என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதில் கூறிய அவர் மற்றவர்கள் மீது குற்றம்சாட்டும் முன் அவர் ஏன் போலீஸ் வேலையில் இருந்து வெளியில் வந்தார் என்ற மர்மத்தை தெரிவிக்க வேண்டும் என்றார்.

அத்திட்டம் வட இந்தியா மட்டுமின்றி தமிழகத்திலும் இளைஞர்கள் மத்தியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தொடர்ந்து அதிமுகவில் நடைபெறும் பெற்ற தலைமை விவகாரத்தைப் பற்றி பேசிய அவர் ஒன்றை தலைமையாக இருந்தாலும் சரி இரட்டை தலைமையாக இருந்தாலும் சரி மூன்றாம் தலைமையாக இருந்தாலும் சரி தமிழ்நாட்டில் அதிமுக பாஜகவின் கைபாவையாக தான் இருப்பார்கள். தமிழக ஆளுநர் தொடர்ந்து சனாதனத்தை வளர்ப்புக் காலம் இது என்று தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர் ஆர்.என்.ரவி ஆளுநர் ரவி இல்லை, திருமாவளவன் கூறியதைப் போல அவர் ஆர்.எஸ்.எஸ் ரவி” என்று தெரிவித்தார்.