மோடிய மொதல்ல பதவியிலிருந்து தூக்குனா தான் இந்தியாவுக்கு நல்ல நாள்- ஈவிகேஎஸ் இளங்கோவன்
பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் சாடியுள்ளார்.
கர்மவீரர் காமராஜர், தனது வாழ்வின் இறுதிவரை, இந்திரா காந்தி அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. நெருக்கடி நிலையை அறிவிக்கும் முன்னரே, நமது நாட்டை நெருக்கடி நிலையில்தான் இந்திரா காந்தி அவர்கள் வைத்திருந்தார். அதனால்தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே அவரைக் கடுமையாக எதிர்த்தனர். நெருக்கடி நிலை அறிவிக்கும் முன்னர் நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதலபாதாளத்தில் கிடந்தது. நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருந்த பல மாநில அரசுகளைக் கலைத்தவர் இந்திரா காந்தி. நெருக்கடி நிலைக்கு பின்னர் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, மக்கள் மீதான அச்சத்தில் இந்திரா காந்தி வெளிநாடு செல்லும் திட்டம் இருந்தது. அப்படி அவர் வெளியேறி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும். ஜனநாயகத்துக்கு விரோதமாக, நெருக்கடி நிலையை அறிமுகப்படுத்தி, பொதுமக்கள் கோபத்துக்கு ஆளானவர் இந்திரா காந்தி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சாடிவருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன், “முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவுக்கு யாரையும் விமர்சனம் செய்வதற்கு அருகதை கிடையாது. பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும்” என்றார்.