நீங்க தப்பித்தாலும் ராசா மாட்டிக் கொள்வார் என்ற பாசமா அக்கா?

 
ர

உதயநிதியும் நீங்களும் அடித்துக்கொண்டு கொடுத்தீங்க.  நீங்க தப்பித்தாலும் ராசா மாட்டிக் கொள்வார் என்ற பாசமா அக்கா? என்று  கனிமொழிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார் திருச்சி சூர்யா.

ஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தந்தை- மகன் இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விடிய விடிய அடித்து துன்புறுத்தப்பட்டதில்  பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த விவகாரம் ஐநா வரைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.  இந்த வழக்கில் இன்னமும் விசாரணை நடந்து வருகின்றது.

இந்நிலையில்  இதுகுறித்து திருச்சி சூர்யா, கனிமொழி எம்பிக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.  ‘’அக்கா வேறு தொகுதியில் நடக்கும் பிரச்சனைக்கு நியாயத்துக்காக குரல் கொடுக்கும் நீங்கள். இதற்கு உண்டான பதிலை இதுவரை உங்கள் ஆட்சி வந்தும் இரண்டு வருடம் ஆகியும் நியாயம் கிடைக்காமல். அதற்கு முன் அரசியல் செய்வதற்காக இறந்தவர் வீட்டில் நிதி கொடுப்பதற்கு நீங்களும் உதயநிதியும் அடித்துக் கொண்டு போய் கொடுத்தீர்களே நிதி கொடுத்தீர்கள் நியாயம் கொடுத்தீர்களா?’’ என்று கேட்கிறார்.

க்ச்

அவர் மேலும்,  ‘’பிற வழக்குகளில் ஏன் மத்திய அரசு இரக்கம் காட்டுகிறது என்று கேட்கும் நீங்கள். 2ஜி வழக்கில் மேல்முறையீடு விசாரிக்க மத்திய அரசு துரிதப்படுத்த வேண்டும், என்மேல் குற்றமில்லை என்று காண்பிக்க மேல்முறையீட்டில் இருப்பவர்கள் நீங்கள் ஏன் பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவது இல்லை? நீங்கள் தப்பித்தாலும் ராசா மாட்டிக் கொள்வார் என்ற பாசமா அக்கா. என்கிட்டயே வா’’என்கிறார்.