ஓபிஎஸ் அணி எம்.எல்.ஏவுக்கு குரல் கொடுத்த இபிஎஸ் அணி எம்.எல்.ஏ.

 
eo

ஓபிஎஸ் அணி எம் .எல். ஏவுக்காக சட்டமன்றத்தில் இபிஎஸ் அணி எம் .எல்.ஏ குரல் கொடுத்ததால்  அதிமுக உறுப்பினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 
தமிழக சட்டமன்றத்தில் இன்று வினா விடை நேரத்தின் போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன்.   இவர் ஓபிஎஸ் அணியில் உள்ளவர். தனது தொகுதிக்கு உட்பட்ட 58 கிராம கால்வாய் சிமெண்ட் கால்வாயாக தரம் உயர்த்தி தரப்படுமா என்ற கேள்வியை எழுப்பினார்.

அட்

இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்,  மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு திட்டம் அது . பக்கத்தில் வைகை ஆறு ஓடினாலும் உசிலம்பட்டி வளர்ச்சியான தொகுதி.  இதை மனதில் வைத்து தான் மாஸ்டர் பிளான் போட்டார் கருணாநிதி.    வைகை ஆற்றின் உபரி நீரை 58 கிராம கால்வாய்கள் அமைத்துக் கொண்டு செல்வது என்று முடிவு செய்தார்.  அதன்படி தான் கடந்த 1996 ஆம் ஆண்டில் அந்தத் திட்டத்திற்கு துவக்க விழா நடந்தது. கருணாநிதி கொண்டு வந்த அந்தத் திட்டத்தை கண்ணின் மணி போல காப்போம் என்றார்.

 இதை அடுத்து பேசிய  முன்னாள் அமைச்சரும் இபிஎஸ் அணியில் உள்ள வருமான திண்டுக்கல் சீனிவாசன்,  ஐயப்பன் கேட்டிருப்பது அந்த தொகுதி மக்களுக்கானது. அதனால் அவற்றை செய்து கொடுக்க வேண்டும் . சிமெண்ட் தரை அமைக்க முடியாது என அமைச்சர் செல்வது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியிருந்தார்.

 அதன் பின்னர் பேசிய முன்னாள் முதல்வர் ஓ . பன்னீர்செல்வம்,   இந்த விவகாரம் குறித்து அரசாணை நிறைவேற்றி 58 கிராம மக்களும் பயன் பெறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஓபிஎஸ் அணியில் உள்ளவருக்காக இபிஎஸ் அணியில் உள்ளவர் குரல்  கொடுத்தது அதிமுக உறுப்பினர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.