அதிமுக வேட்பாளர்களுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!

 

அதிமுக வேட்பாளர்களுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவை 130 தொகுதிகளில் நேரடியாக களம் காண உள்ளது. பிற தொகுதிகளில் திமுகவின் கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன. முதல் முறையாக முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் ஸ்டாலினுக்கும், மக்கள் செல்வாக்கின்றி அரியணை ஏறிய ஈபிஎஸ்க்கும் இந்த தேர்தல் மிக முக்கியமானது.

அதிமுக வேட்பாளர்களுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!

குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் எப்படியாவது வென்று விட வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கிறார். ஆட்சியை பிடிக்கவில்லை என்றால் அதிமுகவை கைப்பற்ற சசிகலா கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அதிமுக சிதறவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இப்படி பல்வேறு வியூகங்களுக்கிடையே சிக்கிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலுக்கான ஒவ்வொரு நடவடிக்கையும் பல்வேறு கண்ணோட்டங்களில் யோசித்து அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அதிமுக வேட்பாளர்களுடன் ஈபிஎஸ் திடீர் ஆலோசனை!

இந்த நிலையில், சேலம் புறநகர் அதிமுக அலுவலகத்தில் வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் பிரச்சாரம், தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஈபிஎஸ், வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரச்சாரத்தை நேற்று சேலத்தில் இருந்து தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.